KKRvsSRH 1st Inningss [file image]
KKRvsSRH : ஐபிஎல் தொடரின் 3-வது போட்டியாக கொல்கத்தா அணியும், ஹைதராபாத் அணியும் தற்போது விளையாடி வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனால் பலம் வாய்ந்த பேட்டிங்கை கொண்ட கொல்கத்தா அணி பேட்டிங் செய்ய களமிறங்கியது.
இதன் மூலம் தொடக்க வீரர்களாக சுனில் நரேனும், பிலிப் சால்ட்டும் களமிறங்கினர். பிலிப் சால்ட் ஒரு பக்கம் அதிரடி காட்ட, மறுமுனையில் இருந்த சுனில் நரேன் முதல் நிதிஷ் ராணா வரை களமிறங்கிய வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார்கள். இதனால் 51-4 என இக்கட்டான நிலையில் நடராஜன் பந்து வீச்சுக்கு கொல்கத்தா அணி திணறி வந்தது.
அதன் பிறகு களமிறங்கிய ரமன்தீப் சிங், பிலிப் சால்ட்டுடன் சேர்ந்து அதிரடி காட்டினார். இதனால் கொல்கத்தா அணி இக்கட்டான நிலையில் இருந்து தப்பித்ததோடு அணியின் ஸ்கோரையும் உயர்த்தியது. பொறுமையாக விளையாடி ரன் சேர்த்த பிலிப் சால்ட் 54 ரன்களுக்கு ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார்.
அவரை தொடர்ந்து களமிறங்கிய ஆண்ட்ரே ரஸ்ஸல் அதிரடி காட்ட தொடங்கினார். அவருடன் இணைந்த ரிங்கு சிங்கும் அதிரடி காட்ட கொல்கத்தா அணி பெரிய ஸ்கோரை நோக்கி நகர்ந்தது. இறுதியில், 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு கொல்கத்தா அணி 208 ரன்கள் எடுத்தது.
கொல்கத்தா அணியில் அதிரடி காட்டிய ஆண்ட்ரே ரஸ்ஸல் 25 பந்துகளில் 65* ரன்கள் இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். ஹைதராபாத் அணியில் நடராஜன் 3 விக்கெட்டை எடுத்து அசத்தினார். இதை தொடர்ந்து 209 என்ற இமாலய இலக்கை நோக்கி களமிறங்க உள்ளது ஹைதராபாத் அணி.
மும்பை : ஐபிஎல் 2025 சீசனில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) அணிகளுக்கு இடையே மார்ச்…
சென்னை : இந்தியாவில் சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலையை எண்ணெய் நிறுவனங்களான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (IOC), ஹிந்துஸ்தான் பெட்ரோலியம்…
மும்பை : எப்போதுமே திறமையான இளம் வீரர்களை எடுத்து அவர்களுக்கு வாய்ப்பு கொடுத்து அவர்களும் வளர்வதற்கு ஒரு காரணத்தை மும்பை…
மும்பை : ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் விளையாடின. டாஸ்…
மும்பை : ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் விளையாடி வருகின்றன.…
டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி நேற்று (மார்ச் 30) நாக்பூர் பயணம் மேற்கொண்டது, இந்த பயணத்தில் ஆர்எஸ்எஸ் தலைமையகத்திற்கு…