2023 ஆம் ஆண்டு உலகக்கோப்பை தான் எனது குறிக்கோள்- ஷிகர் தவான்
2023ஆம் ஆண்டு நடக்கவுள்ள உலகக்கோப்பை தொடர் தான் தற்பொழுது தன்னுடைய குறிக்கோள் என்று ஷிகர் தவான் கூறியுள்ளார்.
இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடிவரும் தென்னாபிரிக்க அணி, மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. ஷிகர் தவான் தலைமையில் களமிறங்கும் இந்திய அணி, தென்னாபிரிக்க அணியை எதிர்த்து இன்று விளையாடுகிறது. முதல் போட்டி இன்று லக்னோவில் தொடங்குகிறது.
இந்த போட்டிக்கு முன்னதாக ஷிகர் தவான் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது, 2023 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உலகக்கோப்பை தொடர் தான் தற்போது தன்னுடைய ஒரே குறிக்கோள், அதற்கு முழு உடற்தகுதி மற்றும் மன வலிமையுடன் இருக்க என்னை தயார் செய்வேன் என்று அவர் கூறியுள்ளார். 36 வயதான ஷிகர் தவான், 158 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 17 சதம் மற்றும் 38 அரைசதங்களுடன் 6647 ரன்கள் குவித்துள்ளார். ஷிகர் தவான், 34 டெஸ்ட் (சராசரி-40.61), 158 ஒருநாள் (சராசரி-45.84), மற்றும் 68 டி-20 (சராசரி-27.92) போட்டிகளில் விளையாடியுள்ளார்.
ஷிகர் தவான்மேலும் கூறியதாவது, தான் மிகவும் ஆசிர்வதிக்கப்பட்டிருக்கிறேன், எனக்கு கிடைத்த இந்த கிரிக்கெட் வாழ்கைக்கு நான் மகிழ்ச்சியடைகிறேன். வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் என்னுடைய அனுபவங்களை இளம் வீரர்களுக்கு பகிர்கிறேன். தற்போது இந்திய அணிக்கு தலைமை தாங்கும் புதிய பொறுப்பு தனக்கு கிடைத்திருக்கிறது அதை சவாலாக ஏற்று மிகவும் அனுபவித்து விளையாடுவதாகவும் அவர் கூறியுள்ளார். 2023 ஆம் ஆண்டு உலகக்கோப்பை தான் தன்னுடைய ஒரே குறிக்கோள் என்று ஷிகர் தவான் கூறியுள்ளார்.