ஐசிசி உலகக் கோப்பையில் அனைத்து குழு ஆட்டங்களிலும் 9 மைதானங்களில் விளையாடும் ஒரே அணி இந்தியா.
இந்தியாவில் நடைபெற உள்ள 2023-ஆம் ஆண்டு ஐசிசி உலக கோப்பை 50 ஓவர் கிரிக்கெட் தொடருக்கான அட்டவணையை ஐசிசி கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியிட்டது. அதன்படி, உலகக்கோப்பை தொடர் அக்டோபர் 5ம் தேதி முதல் நவம்பர் 19ம் தேதி வரை நடைபெறுகிறது. இதுவரை இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இங்கிலாந்து, நியூசிலாந்து, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான், தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகள் உலககோப்பைக்கு தகுதி பெற்றுள்ளன.
சென்னை, ஹைதராபாத், அகமதாபாத், தர்மசாலா, டெல்லி, லக்னோ, புனே, பெங்களூரு, மும்பை மற்றும் கொல்கத்தா என மொத்தம் 10 நகரங்களில் 2023 உலகக்கோப்பை போட்டிகள் நடைபெற உள்ளது. மொத்தமாக 45 லீக் போட்டிகள் நடக்கவுள்ளது. அக்.5-ஆம் தேதி அகமதாபாத்தில் நடக்கவுள்ள முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான இங்கிலாந்து அணியை எதிர்கொள்கிறது நியூசிலாந்து அணி. அதே போல் அக்.8ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இந்திய அணி தங்களது முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை எதிர்கொள்ளவுள்ளது.
இந்த நிலையில், இந்தியாவில் நடைபெற உள்ள 2023 ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி 8,400 கி.மீ பயணம் மேற்கொள்ள உள்ளது. 2023 ஒருநாள் உலகக் கோப்பையின் லீக் கட்டத்தில் இந்திய அணி 34 நாட்களில் 8,400 கிமீ பயணிக்கும் என்று பிடிஐ செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது. உலகக்கோப்பை தொடரில் 9 மைதானங்களில் விளையாடும் ஒரே அணி இந்தியா. இந்திய அணி பயணம் செய்யாத ஒரே நகரம் ஹைதராபாத்.
அங்கு ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் 3 போட்டிகளை மட்டுமே நடக்கிறது. இருப்பினும், இந்திய அணி குவஹாத்தி மற்றும் திருவனந்தபுரத்தில் பயிற்சி ஆட்டங்களை விளையாடும், இது இந்திய அணிக்கு இன்னும் அதிகமான பயணத்தை சேர்க்கும். அனைத்து 10 அணிகளிலும் பெரும்பாலான நகரங்களில் விளையாடுவார்கள். போட்டிக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட 10 இடங்களில் 9 இடங்களில் ஒரு அணி மட்டுமே விளையாடும். இருப்பினும், எந்த ஒரு நகரத்திலும் எந்த அணியும் இரண்டு முறைக்கு மேல் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய அணி தனது முதல் போட்டியில் அக்டோபர் 8ம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பலம் வாய்ந்த ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. அக்டோபர் 11ம் தேதி டெல்லியில் இந்தியாவும் ஆப்கானிஸ்தானும், அக்டோபர் 15ஆம் தேதி அகமதாபாத்தில் இந்தியா பாகிஸ்தான், அக்டோபர் 19ஆம் தேதி புனேவில் இந்தியா, வங்கதேசம், அக்டோபர் 22ம் தேதி தர்மசாலாவில் இந்தியா நியூசிலாந்து, அக்டோபர் 29ஆம் தேதி லக்னோவில் இந்திய அணி இங்கிலாந்தை எதிர்கொள்கிறது.
மேலும், நவம்பர் 2ம் தேதி இந்திய அணி தகுதிச்சுற்றுக்கு வெல்லும் அணியுடன் மும்பையில் விளையாடும். நவம்பர் 5ம் தேதி கொல்கத்தாவில் இந்தியா தென்னாப்பிரிக்காவை எதிர்கொள்கிறது. நவம்பர் 11ம் தேதி இந்திய அணி தகுதி சுற்றில் இருந்து வரும் 2வது அணியை பெங்களூரில் எதிர்கொள்கிறது என்பது குறிப்பிடப்படுகிறது.
சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் ஆளுநர் உரை மீதான விவாதத்தின்போது எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி “நீட் தேர்வை…
சென்னை : சட்டப்பேரவை கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் பதிலுரையாற்றி வருகிறார். அப்போது…
சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த திங்கள்கிழமை முதல் தொடங்கிய நிலையில், நேற்று ஐந்தாவது நாளில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள்…
குஜராத் : இந்திய மகளிர் கிரிக்கெட் அணி தற்போது அயர்லாந்துக்கு எதிராக 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட கிரிக்கெட்…
டெல்லி : மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகியிருந்த கேம் சேஞ்சர் திரைப்படம் ஜனவரி 10 திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. ஷங்கர்…
சென்னை : நேற்று முன்தினம் தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகளில் நிலவிய…