2019 ஆண்டுக்கான ICC விருதுகள்- ரோகித்..’சிறந்த வீரர்’.!கோலிக்கு ‘ஸ்பிரிட் ஆப் கிரிக்கெட்’ விருது-அறிவிப்பு

Default Image
  • 2019ஆம் ஆண்டில் உத்வேகத்துடன் ஆடிய வீரருக்கான விருதுக்காக விராட் கோலி தேர்வாகி அசத்தல்.
  • 2019ஆம் ஆண்டுக்கான சிறந்த ஒருநாள் போட்டி வீரராக இந்திய வீரர் ரோகித் சர்மா தேர்வாகி அசத்தி உள்ளார்.

 

ஜசிசி வெளியிட்டுள்ள இந்த விருது பட்டியலில் 2019 ஆம் ஆண்டு உலக கோப்பையில் மட்டும் 5 சதங்களை விளாசித் தள்ளிய இந்திய வீரரான ரோகித் சர்மா தான் ஆண்டின் மிகச் சிறந்த ஒருநாள் கிரிக்கெட் போட்டி வீரராக தேர்வாகி உள்ளார்.

Related image

அதேபோல் சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரராக ஆஸ்திரேலியா வீரரான பேட் கமின்ஸு தேர்வாகி உள்ளார்.மேலும் அனைத்துவிதமான போட்டிகளிலும் சிறந்த வீரராக இங்கிலாந்து அணியின் பென் ஸ்டோக்சும் அறிவிக்கப்பட்டுள்ளார்.

Image result for virat rohit photo

என்ன கோலிக்கு என்ன விருது என்று தானே யோசிக்கிறீர்கள் அது தான் ஸ்பிரிட் ஆப் கிரிக்கெட் விருதுக்கு தேர்வாகியுள்ளார்.எதுக்கு இந்த விருது என்றால் ஓவல் மைதானத்தில் நடந்த போட்டியில் ஆஸ்திரேலிய வீரரான ஸ்டீவ் ஸ்மித்தை ரசிகர்கள் கேலி செய்தனர்.

Related image

இதனை கண்ட கோலி ரசிகர்களைத்  தடுத்தார். கேலி செய்தவர்களை தடுத்தமைக்காக விராட் கோலிக்கு, ஸ்பிரிட் ஆப் கிரிக்கெட் என்கிற இவ்விருது (Spirit of Cricket) அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவர் ஐசிசியின் ஒருநாள் மற்றும் டெஸ்ட் கனவு அணியின் கேப்டனாகவும் கோலியே தேர்வாகி அசத்தியுள்ளார்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 16042025
Nayinar Nagendran
CM Break fast Scheme
china donald trump
Nainar Nagendran - R.S. Bharathi
rain news today
Nellai Iruttukadai Halwa shop