2018 IPL:வார்னர் இடத்தை பிடிக்கும் அதிரடி வீரர்…!வார்னர் இடத்தை நிரப்புவாரா ?
இங்கிலாந்து வீரர் அலெக்ஸ் ஹேல்ஸ் ஐதராபாத் அணியில் டேவிட் வார்னருக்கு பதிலாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இந்தியன் பிரிமியர் லீக் (ஐ.பி.எல்) தொடருக்கான 11வது சீசன் வரும் 7ல் துவங்குகிறது. இதில் இடம் பெற்றுள்ள ஐதரபாத் அணியின் கேப்டனாக ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர் இருந்தார். சமீபத்தில் தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக கேப்டவுனில் நடந்த 3வது டெஸ்டில், சக வீரரர் பான்கிராப்ட் பந்தை சேதப்படுத்திய குற்றத்திற்கு துணை போன இவருக்கு, ஒரு ஆண்டு தடை விதிக்கப்பட்டது. இதனையடுத்து ஐதராபாத் அணியில் இருந்து நீக்கப்பட்டார். இவருக்கு பதிலாக நியூசிலாந்தின் வில்லியம்சன் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில் வார்னருக்கு பதிலாக மாற்று வீரராக இங்கிலாந்தின் அலெக்ஸ் ஹேல்ஸ், தேர்வு செய்யப்பட்டார். சமீபத்தில் முடிந்த வீரர்கள் ஏலத்தில் விலை போகாத இவர், அடிப்படை தொகையான ரூ. ஒரு கோடிக்கு ஒப்பந்தமானார். இங்கிலாந்து சார்பில் சர்வதேச ‘டுவென்டி-20’ போட்டியில் சதமடித்த ஒரே வீரரான இவர், கடந்த 2015ல் மும்பை அணியில் இடம் பெற்றிருந்தார். தவிர இவர், ‘பிக் பாஷ்’, பாகிஸ்தான் பிரிமியர் லீக் மற்றும் வங்கதேச பிரிமியர் லீக் தொடர்களில் பங்கேற்றுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.