ஐபிஎல் 2024 : முதலில் இறங்கிய குஜராத் 20 ஓவரில் 4 விக்கெட்டை இழந்து 199 ரன்கள் எடுத்தனர்.
இன்றைய ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதி வருகிறது. இந்த போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி குஜராத் டைட்டன்ஸ் அணியில் தொடக்க வீரர்களாக விருத்திமான் சாஹா ,
சுப்மன் கில் இருவரும் களமிறங்கினர்.
ஆட்டம் தொடங்கிய 3-வது ஓவரில் தொடக்க வீரர் விருத்திமான் சாஹா 11 ரன் எடுத்து வெளியேறினார். அடுத்து வந்த கேன் வில்லியம்சன் , சுப்மன் கில் உடன் ஜோடி சேர்ந்துசிறப்பாக விளையாடினர். நிதானமாக ஆடி வந்த கேன் வில்லியம்சன் 26 ரன்கள் எடுத்து விக்கெட்டை இழந்தார்.
3-வது விக்கெட்டுக்கு களமிறங்கிய தமிழக வீரர் சாய் சுதர்சன் வந்த வேகத்தில் அதிரடியாக விளையாட தொடங்கினார். அதன்படி சாய் சுதர்சன் 19 பந்தில் 6 பவுண்டரி உட்பட மொத்தம் 33 ரன்கள் குவித்து பெவிலியன் திரும்பினார். இதற்கிடையில் தொடக்க வீரர் சுப்மன் கில் 31 பந்தில் அரைசதம் விளாசினார்.
அடுத்து வந்த மற்றோரு தமிழக வீரரான விஜய் சங்கர் வந்த வேகத்தில் வெறும் 8 ரன்கள் எடுத்து நடையை காட்டினார். குஜராத் ஒருபுறம் விக்கெட்டை இழந்தாலும் மறுபுறம் சுப்மன் கில் அதிரடியாக விளையாடி 48 பந்தில் 4 சிக்ஸர் , 6 பவுண்டரி உட்பட 89* ரன்கள் குவித்து கடைசிவரை களத்தில் இருந்தார்.
இறுதியாக குஜராத் 20 ஓவரில் 4 விக்கெட்டை இழந்து 199 ரன்கள் எடுத்தனர். பஞ்சாப் கிங்ஸ் அணியில் ரபாடா 2 விக்கெட்டையும், ஹர்ஷல் படேல், ஹர்பிரீத் தலா 1 விக்கெட்டை பறித்தனர்.
சென்னை : நடிகர் ஜெயம் ரவிக்கும் - ஆர்த்தி என்பவருக்கும் கடந்த 2009இல் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 2 குழந்தைகள்…
சென்னை : கிண்டி அரசு மருத்துவமனையில், வயிற்று வலி காரணமாக அனுமதிக்கப்பட்ட இளைஞர் உயிரிழந்ததால் பதற்றம் எழுந்துள்ளது. தீவிர சிகிச்சை…
டெக்ஸாஸ் : அமெரிக்காவின் தொழில்முறையிலான குத்துச்சண்டை போட்டி நடைபெற்று வருகிறது. இதில், இன்று நடைபெறும் போட்டியில் அமெரிக்காவின் முன்னாள் ஹெவி…
சென்னை : கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில் இன்று ஒரு இளைஞர் வயிற்று வலியால் உயிரிழந்த சம்பவம்…
சென்னை : கடந்த சில நாட்களாக உச்சம் தொட்டு வந்த தங்கத்தின் விலை தற்போது மீண்டும் சற்று உயர்ந்துள்ளது. தொடர்ந்து…
கொழும்பு : இலங்கையில் நிலவிய மோசமான பொருளாதர சூழலை அடுத்து ஜனாதிபதி, பிரதமர் பதவி விலகிய நிலையில், நாட்டின் புதிய…