இரண்டாவது இன்னிங்சில் இந்திய அணி ஆடுவது மிகவும் கடினம் என்று சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான நான்காவது டெஸ்ட் போட்டி செளதாம்ப்டனில் நடந்து வருகிறது. முதல் இன்னிங்சில் பும்ரா 3 விக்கெட், இஷாந்த், ஷமி, அஸ்வின் தலா 2 விக்கெட் கைப்பற்றி இங்கிலாந்தை 246 ரன்னில் சுருட்டினார். இதனை தொடர்ந்து நேற்றைய 2ம் நாளில் முதல் இன்னிங்ஸ் ஆட்டத்தை தொடங்கிய இந்திய அணி, மொயீன் அலியின் (5) பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் தவித்தது. இருப்பினும் புஜாராவின் 15-வது சதத்தால் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 273 ரன்கள் சேர்ந்தது.
27 ரன் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி நேற்றைய ஆட்ட நேரம் முடிவில் 2-வது இன்னிங்சில் 8 விக்கெட் இழப்புக்கு 260 ரன்கள் எடுத்தது.
இந்திய அணியின் பந்துவீச்சில் முகமது ஷமி 3 விக்கெட்டும், இஷாந்த் ஷர்மா 2 விக்கெட்டும், அஸ்வின், பும்ரா தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர் .இன்று நான்காம் நாள் ஆட்டம் தொடங்கியது.இந்நிலையில் இங்கிலாந்து அணி 96.1 ஓவர்களில் 271 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இங்கிலாந்து அணியின் பேட்டிங்கில் பட்லர் 69 ரன்கள் அடித்தார்.இந்திய அணியின் பந்துவீச்சில் முகமது சமி நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.இதனையடுத்து இந்திய அணிக்கு 245 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
இந்நிலையில் ஆடுகளம் குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில், இந்த ஆடுகளத்தில் நான்காவது இன்னிங்க்ஸாக இந்தியா ஆடும் போது ஆடுகளம் பந்துவீச்சுக்கு மேலும் சாதகமாக இருக்கும் . ஆடுகளத்தில் இருக்கும் சிறிய சிதைவுகள் காரணமாக சுழல் பந்துவீச்சுக்கும் ஒத்துழைக்கும். எனவே, இந்தியா பேட்டிங் செய்வது அவ்வளவு எளிதாக இருக்காது.இந்தியா தன் இரண்டாம் இன்னிங்க்ஸில் 250 ரன்களுக்கும் மேல் துரத்திப் பிடிக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.
ஜார்க்கண்ட் : மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் சட்டப் பேரவைத் தேர்தல்களில் பதிவான வாக்குகள் இன்று காலை 8மணி முதலே எண்ணப்பட்டு…
மேற்கு வங்கம் : மேற்குவங்கத்தில நடந்த இடைத்தேர்தலில் 6 தொகுதிகளிலும் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. முன்னதாக…
மும்பை : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு அறிவிக்கப்பட்டு வந்த நிலையில்,…
பீகார் : மாநிலத்தில் பெலகஞ்ச், இமாம்கஞ்ச், ராம்கர் மற்றும் தராரி ஆகிய நான்கு தொகுதிகளின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. தராரி…
கேரளா : கேரளாவின் வயநாடு எம்.பி. பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்ததை அடுத்து, அங்கு அவரது தங்கை கேரளா…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு பிரமாண்டமாகக் கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம்…