20-20 உலகக் கோப்பை…..இந்தியா-இங்கிலாந்து அரையிறுதியில் நாளை மோதல்…!!
இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதும், மகளிர் 20 ஓவர் உலகக் கோப்பைக் கிரிக்கெட் தொடரின் 2-வது அரையிறுதிப் போட்டி நாளை நடைபெற உள்ளது.
6-வது மகளிர் 20 ஓவர் கிரிக்கெட் தொடர் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகிறது. இதன் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில், முன்னாள் சாம்பியனான இங்கிலாந்து அணியுடன், இந்திய அணி நாளை மோத உள்ளது. ஆண்டிகுவாவில் நடைபெறும் இந்த போட்டி, இந்திய நேரப்படி அதிகாலை 5.30 மணிக்கு தொடங்க உள்ளது.
கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி, இதுவரை நடந்த லீக் சுற்றுகளில் நியூசிலாந்து, அயர்லாந்து, பாகிஸ்தான் உள்ளிட்ட அணிகளை வீழ்த்தி, தனது பிரிவில் முதலிடத்தில் உள்ளது. எனவே நாளை நடைபெற உள்ள அரையிறுதிப் போட்டியிலும் இந்திய மகளிர் அணி அபார வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்குள் நுழையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
dinasuvadu.com