20 ஓவர் தொடரை கைப்பற்றுமா இந்தியா..! நாளை 2வது ஆட்டம்..!
இந்திய அணி மூன்று 20 ஓவர், மூன்று ஒருநாள் மற்றும் 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்கு இங்கிலாந்தில் பயணித்தது. மான்செஸ்டரில் முதலாவது 20-ஓவர் ஆட்டம் நேற்று தொடங்கியது.
முதலாவது இருபது ஓவர் போட்டியில் இந்திய அணி கேப்டன் பந்துவீச்சை தேர்வு செய்தார்.பின்னர் விளையாடிய இங்கிலாந்து அணி ஆரம்பமே அமர்களமாக மாறியது,ஜெய்சன் ராய் அதிரடியாக விளையாடி 30 ரன்கள் எடுத்தார்.பின்னர் இறங்கிய ஹய்லஸ் குல்தீப் சுழலில் சிக்கி ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார்.பின்னர் குல்தீப் வீசிய 14-வது ஓவரில் மோர்கன் 7,பைர்ஸ்டோவ் 0, ரூட் 0 ரன்களில் தொடர்ச்சியாக வெளியேறினார்.இதன் மூலம் குல்தீப் ஒரே ஓவரில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
தொடர்சியாக மொயீன் அலி 6,பட்லர் 69,ஜோர்டன் 0 ரன்களில் வெளியேறினர்.20 ஓவர்களின் முடிவில் இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 159 ரன்கள் மட்டுமே எடுத்தது.இந்திய அணியின் பந்துவீச்சில் குல்தீப் 4 ஓவர்கள் வீசி 5 விக்கெட்டுகள் எடுத்து 24 ரன்கள் விட்டுக்கொடுத்தார்.பின்னர் களமிறங்கிய இந்திய 160 என்ற வெற்றி இலக்கை 18.2 ஓவர்களில் எட்டியது.இந்திய அணியின் பேட்டிங்கை பொறுத்துவரை ராகுல் அபாரமாக விளையாடி 101 ரன்கள் அடித்தார்.இது இவருக்கு இரண்டாவது சதம் ஆகும்.மேலும் ரோகித் 32, தவான் 4,விராட் கோலி 20 ரன்கள் அடித்தனர்.இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.3 போட்டிகள் கொண்ட தொடரை இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதும் 2-வது 20 ஓவர் போட்டி நாளை (6-ந்தேதி) கார்டிப் நகரில் நடக்கிறது. இந்த போட்டியில் வெற்றிபெற்று தொடரை கைப்பற்றும் முனைப்பில் உள்ளது இந்திய அணி.