ஒரு நாள் 2 உலககோப்பை போட்டிகள்.! இங்கிலாந்து vs வங்கதேசம்.! பாகிஸ்தான் vs இலங்கை.!

Today World cup matches ENGvBAN PAKvSL

இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெறும் உலக கோப்பை கிரிக்கெட் தொடரானது கடந்த அக்டோபர் 5 தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதுவரை 6 போட்டிகள் நிறைவடைந்த நிலையில், இன்று 7வது போட்டி மற்றும் 8வது உலக்கோப்பை போட்டிகள் நடைபெற உள்ளது. காலை 10.30 மணிக்கு முதல் போட்டியும், பிற்பகல் 2 மணிக்கு மற்றொரு போட்டியும் நடைபெற உள்ளது.

முதல் போட்டியானது இங்கிலாந்து மற்றும் வங்கதேசம் அணிகளுக்கு இடையே நடைபெற உள்ளது. இந்த போட்டியானது காலை 10.30 மணிக்கு ஹிமாச்சல் பிரதேஷம் , தர்மசாலா கிரிகெட் மைதானத்தில் நடைபெற உள்ளது. இதில் ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணியும், சாஹிப் அல் ஹசன் தலைமையிலான வங்கதேசம் அணியும் பலபரிட்சை நடத்தவுள்ளன.

இங்கிலாந்து அணி சார்பாக கேப்டன் ஜோஸ் பட்லர் தலைமையில், ஜானி பேர்ஸ்டோவ், டேவிட் மலான், ஜோ ரூட், ஹாரி புரூக், மொயின் அலி, , லியாம் லிவிங்ஸ்டோன், சாம் கர்ரன், கிறிஸ் வோக்ஸ், அடில் ரஷித், மார்க் வூட், பென் ஸ்டோக்ஸ், கஸ் அட்கின்சன், டேவிட் வில்லி, ரீஸ் டோப்லி என 15 பேர் கொண்டுள்ளனர்.

வங்கதேச அணி சார்பாக கேப்டன் ஷாகிப் அல் ஹசன் தலைமையில், தன்சித் ஹசன், லிட்டன் தாஸ், மெஹிதி ஹசன் மிராஸ், நஜ்முல் ஹொசைன் சாண்டோ, முஷ்பிகுர் ரஹீம்(விக்கெட் கீப்பர்), தவ்ஹித் ஹ்ரிடோய், மஹ்முதுல்லா, தஸ்கின் அகமது, ஷோரிஃபுல் இஸ்லாம், முஸ்தாபிசுர் ரஹ்மான், மஹேதி ஹசன், மஹேதி ஹசன், ஹசன் மஹ்மூத், டான்சிம் ஹசன் சாகிப் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

அடுத்ததாக,  பிற்பகல் 2 மணிக்கு தொடங்கும் ஆட்டத்தில் ஹைதராபாத் ராஜீவ் காந்தி மைதானத்தில் பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியும், தசுன் ஷனக தலைமையிலான இலங்கை அணியும் மோத உள்ளன.

இலங்கை அணி சார்பாக கேப்டன் தசுன் ஷனக தலைமையில், பதும் நிஸ்ஸங்க, குசல் பெரேரா, குசல் மெண்டிஸ்(விக்கெட் கீப்பர்), சதீர சமரவிக்ரம, சரித் அசலங்கா, தனஞ்சய டி சில்வா, தசுன் ஷனக(கேட்ச்), துனித் வெல்லலகே, கசுன் ராஜித, மதீஷ பத்திரன, டில்ஷான் மதுஷங்க, திமுத் கருணாரத்ன, லஹிரு குமாரரத்ன, துஷன் ஹேமந்த, மஹேஷ் தீக்ஷன ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

பாகிஸ்தான் அணி சார்பாக பாபர் அசாம் தலைமையில் ஃபகார் ஜமான், இமாம்-உல்-ஹக், முகமது ரிஸ்வான்(விக்கெட் கீப்பர்), சவுத் ஷகீல், இப்திகார் அகமது, முகமது நவாஸ், ஷதாப் கான், ஹசன் அலி, ஷாஹீன் அப்ரிடி, ஹாரிஸ் ரவுஃப், ஆகா சல்மான், உசாமா மிர் , அப்துல்லா ஷபீக், முகமது வாசிம் ஜூனியர் ஆகியோரும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

அறிவிக்கப்பட்டுள்ள 15 வீரர்கள் கொண்ட அணியில் இருந்து டாஸ் சமயத்தில் அந்த போட்டியில் களமிறங்கும் 11 பேர் கொண்ட அணி வீரர்கள் விவரம் வெளியாகும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்