போட்டியின் போது மயங்கி விழுந்த 2 வெஸ்ட் இண்டீஸ் வீராங்கனைகள்..!
பாகிஸ்தான் வெஸ்ட் இண்டீஸ் இடையேயான 2வது டி20 சர்வதேச போட்டி நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி 20 ஒவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 125 ரன்கள் எடுத்தனர். அடுத்ததாக 126 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் 18 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 103 ரன்கள் எடுத்தனர். இதில், மேற்கு இந்திய தீவுகள் டக்வொர்த் லூயிஸ் முறைப்படி வெற்றி பெற்றது.
இந்நிலையில், இந்த போட்டியின் போது வெஸ்ட் இண்டீஸ் மகளிர் கிரிக்கெட் அணியின் சினெல் ஹென்றி மற்றும் செடியன் நேஷன் என்ற இரு வீராங்கனைகள் அடுத்தடுத்து மைதானத்திலேயே மயங்கி விழந்துள்ளனர்.
சினெல் ஹென்றி முதலில் மயங்கி விழுந்தார் அவரை ஸ்ட்ரெச்சரில் தூக்கிச் சென்றனர். அதன் பிறகு 10 நிமிடங்களுக்குப் கழித்து செடியன் நேஷன் என்ற வீராங்கனையும் மயங்கி விழுந்தார்.
வீராங்கனை இவரையும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். ஆனால் மைதானத்தில் இருவரும் எதற்காக மயங்கி விழுந்தனர் என்பது பற்றி விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை. மேலும், வருகின்ற ஜூலை 5 (நாளை ) 3 வது டி20 போட்டி விவியன் ரிச்சர்ட்ஸ் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
Match between Pakistan and West Indies women cricketers continues … Suddenly West Indies women cricketer fainted and collapsed . She was shifted to a nearby hospital. Hopefully she will recover soon.
VC: @windiescricket#WIWvPAKW #WIWvsPAKW pic.twitter.com/OjhJmWioeO— Qadir Khawaja (@iamqadirkhawaja) July 2, 2021
West indian women cricketer Chinelle Henry’s checkup is undergoing…. Hope she ll be fine…@Chinellehenry
VC: @windiescricket#WIWvPAKW #WIWvsPAKW pic.twitter.com/vKtH6ifmfI
— Qadir Khawaja (@iamqadirkhawaja) July 2, 2021