192 ரன்களில் சுருண்டது இந்திய அணி…! பௌலிங்கில் அசத்திய அணி..!
இங்கிலாந்தில் உள்ள டவுன்டனில் இந்திய அணிகள் மோதுகின்றன. இதில் சிறப்பம்சம் என்ன என்றால் இந்திய பி அணியும் இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.அதில் T20, ஓட்டுநல் போட்டியும், டெஸ்ட் போட்டிகளிலும் விடைவருகிறது. தற்போது இந்தியா ‘ஏ’ – வெஸ்ட் இண்டீஸ் ‘ஏ’ அணிகளுக்கு இடையிலான நான்கு நாட்கள் கொண்ட 2-வது டெஸ்ட் போட்டி நேற்று முன்தினம் தொடங்கியது.
டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் ‘ஏ’ பேட்டிங் தேர்வு செய்தது. வெஸ்ட் இண்டீஸ் ‘ஏ’ கேப்டன் ப்ரூக்ஸ் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதமடித்தார். வெஸ்ட் இண்டீஸ் ‘ஏ’ சிறப்பாக தனது பேட்டிங் ஐ வெளிப்படுத்தியது.
இறுதியில் வெஸ்ட் இண்டீஸ் ‘ஏ’ அணி 90.5 ஓவரில் 302 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. ப்ரூக்ஸ் 122 ரன்கள் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இந்திய ஏ அணி சார்பில் முகமது சிராஜ் 4 விக்கெட்டுக்களும், நதீம் 3 விக்கெட்களும் வீழ்த்தினார்.
இதைத்தொடர்ந்து இந்தியா ‘ஏ’ அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. இந்தியா ஏ அணியில் ஆரம்பம் முதலே தடுமாற்றம் இருந்தது.
இறுதியில், இந்தியா ஏ அணி 48 ஓவர்களில் 192 ரன்களுக்கு சுருண்டது. அங்கிட் பாவ்னே இறுதி வரை 43 ரன்கள் எடுத்து அவுட்டாகாமல் இருந்தார்.
தொடர்ந்து, இரண்டாவது இன்னிங்சை ஆடிய வெஸ்ட் இண்டீஸ் ஏ அணி இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 96 ரன்கள் எடுத்துள்ளது. தொடர்ந்து வெஸ்ட் இண்டீஸ் ‘ஏ’ அணி இந்தியாவை விட முன்னிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.