பஞ்சாப் அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டை இழந்து 179 ரன்கள் எடுத்தனர்.
இன்று நடைபெறவுள்ள ஐபிஎல் தொடரின் 26 வது லீக் போட்டியில் பெங்களூர் – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற பெங்களூர் அணி முதலில் பந்து வீச முடிவு செய்தனர்.
இதைத்தொடர்ந்து, முதலில் இறங்கிய பஞ்சாப் அணியின் தொடக்க வீரர்களாக பிரபாசிம்ரன், கே.எல் ராகுல் இருவரும் களமிறங்கினர். ஆட்டம் தொடக்கத்திலே பிரபாசிம்ரன் 7 ரன் எடுத்து வெளியேற பின்னர் கிறிஸ் கெய்ல் களமிறங்கினார். கே.எல் ராகுல் உடன் இணைந்த கிறிஸ் கெய்ல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
அதிரடியாக விளையாடி வந்த கே.எல் ராகுல் அரைசதம் விளாசினார். சிறப்பாக விளையாடி வந்த கிறிஸ் கெய்ல் 46 ரன் எடுத்து விக்கெட்டை இழந்தார். பின்னர், களமிறங்கிய தீபக் ஹூடா 7 , நிக்கோலஸ் பூரன், ஷாருக் கான் இருவரும் டக் அவுட் ஆனார். அதிலும் நிக்கோலஸ் பூரன் நடப்பு ஐபிஎல் தொடரில் விளையாடிய 7 போட்டியில் 4 போட்டியில் டக் அவுட் ஆனார். அடுத்து ஹர்பிரீத் களமிறங்கினார். வந்த வேகத்தில் ஹர்பிரீத் 25 ரன்கள் விளாசினார்.
இறுதியாக பஞ்சாப் அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டை இழந்து 179 ரன்கள் எடுத்தனர். 180 ரன்கள் இலக்குடன் களமிறங்கவுள்ளது. கடைசிவரை கே.எல் ராகுல் 91*, ஹர்பிரீத் 25* ரன்களுடன் நின்றனர்.
சென்னை: தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரின் மூன்றாவது நாள் இன்று நடைபெற்று வரும் நிலையில், அண்ணா பல்கலை மாணவிக்கு நடந்த பாலியல்…
சென்னை :திருவாதிரை ஸ்பெஷல் களி ரெசிபி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; பச்சரிசி-…
சென்னை: நடிகை நயன்தாராவின் 'Beyond the Fairy Tale' ஆவணப்படத்தில் 'நானும் ரவுடி தான்' படத்தின் காட்சிகளை அனுமதியின்றி பயன்படுத்தியதாகக்…
சென்னை: ராக்கிங் ஸ்டார் யாஷ் நடிப்பில் 'KGF 2' திரைப்படம் கடந்த 2022ம் ஆண்டு வெளியானதைத் தொடர்ந்து அவரது அடுத்த…
சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரின் மூன்றாவது நாள் இன்று நடைபெற்று வரும் நிலையில், அண்ணா பல்கலை மாணவிக்கு நடந்த…
சென்னை: மகளிருக்காக தமிழக அரசு சார்பில் 'கலைஞர் மகளிர் உரிமைத்தொகை' திட்டதின் கீழ், ஒவ்வொரு மாதமும் 15ம் தேதி மகளிர்…