இங்கிலாந்து அணி ராகுல் மற்றும் பண்ட் கூட்டணியை கண்டு மிரண்டுபோய் உள்ளது.
ஐந்தாவது டெஸ்ட் போட்டி லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங்கைத் தேர்வு செய்தது. முதலில் ஆடிய அந்த அணி 332 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அதன்பிறகு களமிறங்கிய இந்திய 292 ரன்கள் எடுத்தது. தற்போது, போட்டியின் நான்காவது நாளான இன்று 8 விக்கெட் இழப்புக்கு 423 ரன்களுடன் 463 ரன்கள் முன்னிலையில் இங்கிலாந்து அணி டிக்ளேர் செய்தது. இங்கிலாந்து அணியில் அதிகபட்சமாக தொடக்க வீரரும், முன்னாள் கேப்டனுமான அலஸ்டர் குக் 147,ரூட் 125 ரன்களும் அடித்தனர்.
இந்திய அணியின் பந்துவீச்சில் ஜடேஜா.விகாரி தலா மூன்று விக்கெட்டுகளும்,சமி இரண்டு விக்கெட்டும் வீழ்த்தியுள்ளனர்.இதனால் இந்திய அணி வெற்றி பெற 464 ரன்கள் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது.இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி 2 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து திணறியது.இதன் பின்னர் ராகுல் மற்றும் பண்ட் ஜோடி சிறப்பாக விளையாடி வருகிறது.ஏற்கனவே ராகுல் சதம் அடித்த நிலையில்,பண்ட் சிறப்பாக ஆடி அரைசதம் அடித்துள்ளார்.இது அவருக்கு முதலாவது அரைசதம் ஆகும்.
லோகேஷ் ராகுல் மற்றும் ரிசத் பண்ட் கூட்டணி சேர்ந்து 150 ரன்கள் அடித்துள்ளது. 18 ஓவர்களில் 174 ரன்கள் வெற்றிக்குத் தேவை என்ற நிலையில் இந்திய அணி உள்ளது.
இங்கிலாந்துக்கு லேசாக உதறல் எடுக்கத் தொடங்கியுள்ளது.12 ஓவர்கள் இருப்பதால் இடைப்பட்ட ஓவர்களில் 45-50 ரன்களை எடுக்க முடிந்தால் இங்கிலாந்து அச்சம் இன்னும் அதிகரிக்கும்.
சாத்தியமில்லாததை நோக்கிய முயற்சியில் ராகுல், பண்ட் சிறப்பாக ஆடி வருகின்றனர். ரிஷப் பந்த் பந்துகளை பளார் பளார் என்று சக்தி வாய்ந்த ஷாட்களாக ஆடி வருகிறார்.
தற்போது வரை இந்திய அணி 72 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 290 ரன்கள் அடித்துள்ளது.களத்தில் ராகுல் 141 ,பண்ட் 94 ரன்களுடனும் உள்ளனர்.
சென்னை : அண்மையில் சிங்கப்பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் 2024 போட்டியில் இந்திய இளம் கிராண்ட் மாஸ்டர் குகேஷ்,…
மெல்போர்ன் : ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி…
சென்னை : சென்னை கிண்டியில் செயல்பட்டு வரும் அண்ணா பல்கலைக்கழகத்தில் நேற்று முன்தினம் இரவு மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு…
சென்னை : தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல், தெற்கு ஆந்திர- வடதமிழக கடலோரப்பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு…
கோவை : கலங்கல், பீடம்பள்ளி, பட்டணம், பாப்பம்பட்டி, அக்கநாயக்கன்பாளையம், பட்டணம்புதூர், பாப்பம்பட்டிப்பிரிவு, கண்ணம்பாளையம், நடுப்பாளையம் (ஒரு மண்டலம்), சின்ன குயிலி,…
சென்னை : விடாமுயற்சி படத்திற்கான அப்டேட் எப்போது வெளியாகும் என்று தான் அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி மற்ற சில நடிகர்களின் ரசிகர்களும்…