RCBvsPBKS : பெங்களூரு அணிக்கு 177 ரன்கள் இலக்கு ..!! முதல் வெற்றி கிடைக்குமா ..?
RCBvsPBKS : ஐபிஎல் தொடரின் 6-வது போட்டியில் டாஸ் வென்று பவுலிங்கை தேர்வு செய்த பெங்களூரு அணிக்கு, பஞ்சாப் அணி இலக்காக
நடப்பு ஐபிஎல் தொடரின் 6-வது போட்டியில், டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனால் பேட்டிங் செய்ய களமிறங்கியது பஞ்சாப் அணி. பஞ்சாபி அணியின் கேப்டனான ஷிகர் தவானும், ஜானி பேர்ஸ்டோவும் தொடக்க வீரர்களான களமிறங்கினர். முதல் இன்னிங்ஸின் 2.3 ஓவரில் முகமது சிராஜின் அபார பந்து வீச்சில் ஜானி பேர்ஸ்டோ, விராட் கோலியின் கையில் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
அதன் பிறகு பஞ்சாப் அணியின் கேப்டன் ஆன ஷிகர் தவன் வழக்கம் போல பொறுமையாக நின்று விளையாடி ஸ்கோரை உயர்த்தினார். அவருடன் தொடர்ந்து களமிறங்கிய எந்த ஒரு வீரரும் நிலைத்து ஆடாமல் போனார்கள். அவர்களை தொடர்ந்து சிறப்பாக விளையாடி கொண்டிருந்த ஷிகர் தவானும் மேக்ஸ்வெல்லின் பந்து வீச்சில் கோலியிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். ஷிகர் தவான் 37 பந்துகளில் 45 ரன்கள் எடுத்திருந்தார்.
அவரை தொடர்ந்து களமிறங்கிய சாம் கர்ரனும், ஜிதேஷ் சர்மாவும் நிலைத்து நின்று பொறுமையாக விளையாடி அவ்வப்போது பவுண்டைர்களையும், சிக்ஸர்களையும் அடித்து அணியின் ஸ்கோரை படிப்படியாக உயர்த்தினார்கள். இருவரின் சிறப்பான ஆட்டத்தால் பஞ்சாப் அணி ஒரு டீசண்ட்டான ஸ்கோரை நெருங்கியது. அதன் பின் நன்றாக விளையாடிய சாம் கர்ரனும் 23 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். அவரை தொடர்ந்து ஜிதேஷ் ஷர்மாவும் அடுத்த ஓவரில் ஆட்டமிழந்து வெளியேறினார் .
இறுதியில், பஞ்சாப் அணி 20 ஓவருக்கு 6 விக்கெட் இழப்பிற்கு 176 ரன்கள் எடுத்தது. பஞ்சாப் அணியில் அதிகபட்சமாக ஷிகர் தவான் 45 ரன்கள் எடுத்தார். பெங்களூரு அணியில் சிராஜும் , மேக்ஸ்வெல்லும் தலா 2 விக்கெட்டுகள் எடுத்தனர். இதனால், 177 ரன்கள் எடுத்தால் வெற்றி என பேட்டிங் செய்ய களமிறங்க உள்ளது பெங்களூரு அணி.