2023-ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் வரும் டிசம்பர் 16ம் தேதி நடத்த பிசிசிஐ திட்டம் என தகவல்.
2023ம் ஆண்டு 16வது இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) தொடருக்கான ஏலம் வரும் டிசம்பர் 16ம் தேதி நடத்த இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது ஒரு சிறிய ஏலமாக இருக்கும், ஆனால் இடம் இன்னும் இறுதி செய்யப்படவில்லை. ஏலத்திற்கான சம்பள பர்ஸ் 95 கோடி ரூபாய், கடந்த ஆண்டை விட 5 கோடி அதிகம், அதாவது ஒவ்வொரு அணியும் தலா ரூ.95 கோடி வரை செலவிடலாம் எனவும் தகவல் கூறப்படுகிறது.
ஒரு அணி, அதன் வீரர்களை விடுவித்தால் அல்லது அவர்களை ஏலத்தில் விட்டால் பர்ஸ் மேலும் அதிகரிக்கக்கூடும். ஐபிஎல் லீக்கிற்கான தேதிகள் இன்னும் தெரியவில்லை, ஆனால், ஐபிஎஸ் தொடர் மார்ச் நான்காவது வாரத்தில் தொடங்கும் என எதிர்பார்க்கபடுகிறது. இதற்கிடையில், ஐபிஎல் 2023 தொடர் இந்தியாவிலேயே நடக்கும் என பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார். அதுவும் ஐபிஎல்-லில் பங்கேற்றுள்ள 10 அணிகளும், தங்களது சொந்த மைதானத்தில் ஒவ்வொரு அணியுடனும் ஒரு போட்டி விளையாடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மூன்று ஐபிஎல் போட்டிகள் குறைவான இடங்களில் மட்டுமே நடத்தப்பட்டன. 2022-ஆம் ஆண்டு மும்பை மற்றும் புனேவில் நடைபெற்றது. 2021 ஆம் ஆண்டில், ஆரம்பத்தில் இந்தியாவில் ஒரு சில இடங்களிலும், பின்னர் யுஏஇயிலும் நடைபெற்றுது. 2020 ஐபிஎல் முழுவதுமாக ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெற்றது. மேலும், பெண்கள் ஐபிஎல் குறித்து கங்குலி கூறியதாவது, மகளிர் ஐபிஎல் தொடருக்கான பணியில் பிசிசிஐ ஈடுபட்டு வருகிறது. அடுத்த ஆண்டு தொடக்கத்தில் முதல் சீசனை தொடங்குவோம் என்று எதிர்பார்க்கிறோம்.
இது குறித்த கூடுதல் விவரங்கள் உரிய நேரத்தில் தொடரும். அடுத்த மாதம் நடைபெற உள்ள ஏஜிஎம்மில் பிசிசிஐ இந்த விவகாரத்தை பரிசீலிக்கும். பொதுக்குழுவின் ஒப்புதல் கிடைத்ததும் மகளிர் ஐபிஎல் தொடருக்கான லீக் போட்டி தொடங்குவதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிசந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தான் ஓய்வு பெறுவதாக திடீரென…
டெல்லி : மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அம்பேத்கர் பற்றி பேசிய விஷயம் பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது. நாடாளுமன்ற…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று,…
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…