1st Innings [file image]
GTvsMI : ஐபிஎல் தொடரின் 5-வது போட்டியாக தற்போது அஹமதாபாத்தில் நடைபெற்று வரும் குஜராத், மும்பை அணிகளுக்கு இடையே ஆன போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனால், பேட்டிங் செய்ய குஜராத் அணியின் தொடக்க வீரர்களான சாஹாவும், கில்லும் களமிறங்கினர். வழக்கம் போல நன்றாக ஆட்டத்தை தொடங்கிய இருவரும் ஸ்கோரை உயர்த்திக் கொண்டிருந்தனர்.
மும்பை அணியின் இதர பந்து வீச்சாளர்களை சமாளித்த விருத்திமான் சாஹா பும்ராவின் பந்தில் போல்ட் ஆனார். இதனால், 19 ரன்களுக்கு ஆட்டமிழந்து திரும்பினார். அவரை தொடர்ந்து விளையாடிய குஜராத் வீரர்கள் நிலைத்து ஸ்கோரை உயரத்தினாலும் நிலைத்து ஆடாமல் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்கள்.
குஜராத் அணியில் தமிழக வீரரான சாய் சுதர்சன் மட்டும் பொறுப்புடன் நிலைத்து ஆடி ஒரு முனையில் ஸ்கோரை உயர்த்தி கொண்டிருந்தார், இருந்தும் பும்ராவின் அபார பந்து வீச்சால் 45 ரன்களுக்கு திலக் வர்மாவிடம் கேட்ச் கொடுத்து சாய் சுதர்சன் விக்கெட்டை இழந்தார். அதன் பிறகு களத்தில் விளையாடிய குஜராத் அணியின் விஜய் ஷங்கரும், ராகுல் தெவாடியாவும் ஸ்கோரை உயர்த்துவதில் முற்பட்டனர்.
தனக்கு கிடைத்த குறைந்த பந்தில் தெவாடியா ஒரு சில பவுண்டரிகளை அடித்தார் ஆனால் கடைசி ஓவரின் முதல் பந்தில் ஆட்டமிழந்து 2 சிக்ஸர்களுடன் 22 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். இதனால், இறுதியில் 20 ஓவருக்கு குஜராத் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்கள் எடுத்தனர்.
மும்பை அணியில் சிறப்பாக பந்து வீசிய ஜஸ்பிரீத் பும்ரா 4 ஓவர் பந்து வீசி வெறும் 14 ரன்களை விட்டு கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார். மேலும், 169 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறலாம் பேட்டிங் செய்ய களமிறங்க உள்ளது மும்பை அணி.
துபாய்: துபாயில் நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி தொடரின் நேற்றைய நாள் ஆட்டத்தில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்தியா அணியும், முகமது…
துபாய் : கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்த இந்தியா – பாகிஸ்தான் மோதும் சாம்பியன்ஸ் டிராஃபி போட்டி இன்று…
ராமேஸ்வரம் : எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக கூறி ராமேஸ்வரம் மீனவர்கள் 32 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.…
துபாய் : இந்தியா - பாகிஸ்தான் மோதும் சாம்பியன்ஸ் டிராஃபி போட்டி இன்று(பிப்.23) துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் பாகிஸ்தான்…
சென்னை : கடந்த வெள்ளிக்கிழமை வெளியான டிராகன் மற்றும் NEEK (நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்), இரு படங்களுமே…
துபாய் : சாம்பியன்ஸ் டிராபியின் மிகவும் பிரமாண்டமான 5 வது போட்டி இன்று இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே…