ஐபிஎல் 2024 : குல்தீப் சுழலில் சுருண்ட லக்னோ.. டெல்லிக்கு 168 ரன்கள் இலக்கு..!

Published by
murugan

ஐபிஎல் 2024:  முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி 20 ஓவரில் 7  விக்கெட்டை இழந்து 167 ரன்கள் மட்டுமே எடுத்தனர்.

ஐபிஎல் தொடர் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்றைய 27-ஆவது போட்டியில்  லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும், டெல்லி கேப்பிட்டல் அணியும் மோதி வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற லக்னோ பேட்டிங் செய்ய தேர்வு செய்த நிலையில் தொடக்க வீரர்களாக குயின்டன் டி காக், கே.எல் ராகுல் இருவரும் களமிறங்கினர்.

ஆட்டம் தொடங்கிய 3-வது ஓவரிலே  குயின்டன் டி காக் 19 ரன் எடுத்து விக்கெட்டை இழந்தார். அடுத்து வந்த தேவ்தட் படிக்கல் 3 ரன்னிலும், மார்கஸ் ஸ்டோனிஸ் 8 ரன்னிலும்,  நிக்கோலஸ் பூரன் கோல்டன் டக் அவுட் ஆகி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்தனர். இதில் 8-வது ஓவரில் மார்கஸ் ஸ்டோனிஸ், நிக்கோலஸ் பூரன் இருவரும் அடுத்தடுத்த பந்துகளில் விக்கெட்டை பறிகொடுத்தனர்.

இதைத்தொடர்ந்து தீபக் ஹூடா களமிறங்க மறுமுனையில் இருந்த தொடக்க வீரரும், கேப்டனுமான கே.எல் ராகுல் நிலைத்து நிற்காமல் 39 ரன்களில் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். கடைசியில் இறங்கிய தீபக் ஹூடா 10, க்ருணால் பாண்டியா 3 ரன்கள் எடுக்க இருப்பினும் ஆயுஷ் படோனி நிதானமாக விளையாடி அரைசதம் விளாசி 55* ரன்கள் எடுத்து  கடைசிவரை களத்தில் இருந்தார்.

இறுதியாக லக்னோ அணி 20 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 167 ரன்கள் எடுத்தனர். டெல்லி அணியில் குல்தீப் யாதவ் 3 விக்கெட்டையும், கலீல் அகமது 2 விக்கெட்டையும் , முகேஷ் குமார் , இஷாந்த் சர்மா தலா 1 விக்கெட்டையும் பறித்தனர்.

Recent Posts

LIVE : தமிழகத்தில் வெளுத்து வாங்கும் மழை முதல்..இந்தியாவுக்கு வரி விதித்த ட்ரம்ப் வரை!

சென்னை :  கடந்த சில நாட்களாக கோடைவெயில் வெளுத்து வாங்கிய நிலையில் நேற்று திடீரென சில மாவட்டங்களில் கனமழை வெளுத்து…

15 minutes ago

ரொம்ப மகிழ்ச்சியா இங்க தான் இருக்கேன்…நேரலையில் வந்த நித்யானந்தா! வீடியோ இதோ..

சென்னை : கைலாசாவில் வசித்து வருவதாக சொல்லப்படும் நித்தியானந்தா கடந்த 2 நாட்களுக்கு முன்பு இறந்துவிட்டதாக அவருடைய சகோதரியின் மகன்…

55 minutes ago

பிரதமர் மோடி நண்பர் தான் ஆனா இந்தியா 26 வரி கொடுக்கணும்! டிரம்ப் அதிரடி உத்தரவு!

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அடிக்கடி அதிரடி நடவடிக்கைகளை அறிவித்து வரும் நிலையில், இன்று (ஏப்ரல் 3)…

2 hours ago

சிக்ஸர் விளாசிய சால்ட்…ஸ்டிக்கை தெறிக்கவிட்ட சிராஜ்..பெங்களூருக்கு எமனாக மாறிய தருணம்!

பெங்களூர் : நீங்க எமனாக மாறுவீர்கள் என்று நினைத்துக்கூட பார்க்கமுடியவில்லை என சமூக வலைத்தளங்களில் சிராஜை பார்த்து ரசிகர்கள் பேசி…

2 hours ago

இன்று இந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் ஜில் அலர்ட்!

சென்னை : குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில்…

2 hours ago

மக்களவையில் நிறைவேறியது வக்பு சட்டத்திருத்த மசோதா! எதிர்ப்பு தெரிவித்த எதிர்கட்சி தலைவர்கள்!

டெல்லி : வக்பு வாரிய திருத்த சட்டமானது இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த சட்ட திருத்தத்தை மத்திய சிறுபான்மை மற்றும்…

3 hours ago