ஸ்டோனிஸ் போராட்டத்தால் குஜராத் அணிக்கு 164 ரன்கள் இலக்கு ..!

LSGvsGT 1st innings[ file image]

ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்று கொண்டிருக்கும் போட்டியில் லக்னோ அணி முதலில் டாஸ் வென்று பேட்டிங் செய்து குஜராத் அணிக்கு

இன்று இரவு போட்டியாக லக்னோவில் உள்ள பாரத் ரத்னா மைதானத்தில் லக்னோ அணியும், குஜராத் அணியும் மோதிக்கொண்டு வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற லக்னோ முதலில் பேட்டிங் தேர்வு செய்து விளையாடியது. அதனை தொடர்ந்து லக்னோ அணியின் தொடக்க வீரர்களான கே.எல்.ராகுலும், டிகாக்கும் களமிறங்கினார்கள்.

முதல் ஓவரை உமேஷ் யாதவ் வீசினார், அவர் வீசிய 2-வது பந்தில் சிக்ஸ் அடித்த டிகாக் அடுத்த பந்தில் ஆட்டமிழந்து வெளியேறினார். அவரை தொடர்ந்து படிக்களும் 7 ரன்களில் வெளியேற, லக்னோ அணி பவர்பிளேவில் இரண்டு விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதன் பிறகு களத்தில் கே.எல்.ராகுலும், மார்கஸ் ஸ்டோனிஸ்ஸும் பொறுமையாக அணியின் ஸ்கோரை உயரத்தினார்கள்.

அதன்படி இருவரும் அவ்வப்போது பவுண்டரிகளை அடித்து அணியை சரிவிலிருந்து மீட்டனர். அதன் பிறகு பொறுமையாக விளையாடி கொண்டிருந்த கே.எல்.ராகுல் 33 ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறினார். அவரை தொடர்ந்து களத்தில் அதிரடி காட்டிக்கொண்டிருந்த மார்கஸ் ஸ்டோனிஸ்ஸும் 43 பந்துகளில் 58 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார்.

அதன் பிறகு களத்தில் இருந்த நிக்கோலஸ் பூரனும், ஆயுஷ் படோனியும் களத்தில் இருந்து அதிரடி காட்ட தொடங்கினார்.  திடீரென அதிரடி காட்டிக்கொண்டிருந்த படோனி 20 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். இறுதி கட்டத்தில் பூரனும், குருனால் பாண்டியாவும் களத்தில் இருந்து கிடைக்கின்ற பந்தை பவுண்டரிகள் அடித்தனர்.

இறுதியில், லக்னோ அணி 20 ஓவருக்கு 5 விக்கெட் இழப்பிற்கு 163 ரன்கள் எடுத்தது. லக்னோ அணியில் அதிகபட்சமாக மார்கஸ் ஸ்டோனிஸ் 43 பந்துகளில் 58 ரன்கள் எடுத்திருந்தார். குஜராத் அணியில்  அதிகபட்சமாக உமேஷ் யாதவ் மற்றும் நல்கண்டே தலா 2 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live tvk
thirumavalavan aadhav arjuna
RCB IPL
Aadhav Arjuna
TVK General Committee meeting
edappadi palanisamy sabanayagar appavu
Tamilnadu CM MK Stalin