KKRvLSG [file image]
ஐபிஎல் 2024: முதலில் இறங்கிய லக்னோ அணி 20 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 161 ரன்கள் எடுத்தனர்.
இன்று ஐபிஎல் தொடரில் முதல் போட்டியில் கொல்கத்தா, லக்னோ அணிகள் மோதி வருகிறது. இந்த போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன் காடன் மைதானத்தில் நடைபெறுகிறது. டாஸ் வென்ற கொல்கத்தா முதலில் பந்து வீச தேர்வு செய்தனர்.
இதைத்தொடர்ந்து குயின்டன் டி காக் மற்றும் கே.எல் ராகுல் இருவரும் களமிறங்க வந்த வேகத்தில் 8 ரன்கள் எடுத்து 2 ஓவரிலே குயின்டன் டி காக் சுனில் நரைனிடம் கேட்சை கொடுத்து விக்கெட்டை இழந்தார். இன்றைய போட்டியில் படிக்கலுக்கு பதிலாக அணியில் சேர்க்கப்பட்ட தீபக் ஹூடா சிறப்பாக விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வெறும் 8 ரன் எடுத்து நடையை கட்டினார்.
பின்னர் ஆயுஷ் படோனி மற்றும் கேப்டன்கே.எல் ராகுல் இருவரும் நிதானமாக விளையாடி சற்று டீம் ஸ்கோரை உயர்த்தினர். கேஎல் ராகுல் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 39 ரன்னில் அவுட் ஆகி ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார். கடந்த போட்டியில் 8 ரன்கள் எடுத்த மார்கஸ் ஸ்டோனிஸ் இந்த போட்டியில் வெறும் 10 ரன் எடுத்து விக்கெட்டை பறிகொடுத்தார்.
மறுமுனையில் இருந்த ஆயுஷ் படோனி 29 ரன் எடுத்து பெவிலியன் திரும்பிய நிலையில் கடந்த போட்டியில் டக் அவுட் ஆன நிக்கோலஸ் பூரன் இந்த போட்டியில் சிறப்பாக விளையாடி ரன்கள் சேர்த்தார். அதன்படி நிதானமாக விளையாடி வந்த நிக்கோலஸ் பூரன் 18 ஓவரில் தொடர்ந்து 2 சிக்ஸர் விளாசி துவண்டு கிடந்த லக்னோ ரசிகர்களுக்கு நம்பிக்கையை கொடுத்தார்.
தொடர்ந்து சிக்ஸர், பவுண்டரி என விளாசிய நிக்கோலஸ் பூரனை கடைசி ஓவரை மிட்செல் ஸ்டார்க் வீசி முதல் பந்திலே அவுட் செய்தார். இதனால் நிக்கோலஸ் பூரன் 45 ரன்களில் விக்கெட்டை இழந்தார். இறுதியாக லக்னோ அணி 20 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 161 ரன்கள் எடுத்தனர். கடைசி ஓவரில் 5 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டை மிட்செல் ஸ்டார்க் பறித்து பெரிய சம்பவத்தை செய்தார்.
கொல்கத்தா அணியில் மிட்செல் ஸ்டார்க் 3 விக்கெட்டையும், சுனில் நரைன், மிட்செல் ஸ்டார்க், வைபவ் அரோரா, வருண் சகரவர்த்தி மற்றும் ஆண்ட்ரே ரசல் தலா 1 விக்கெட்டை பறித்தனர். இந்த போட்டியில் கே.எல் ராகுல் 2 சிக்ஸர் அடித்தார். இதன் மூலம் டி20 போட்டியில் 300 சிக்ஸர்கள் அடித்த இந்தியர்கள் பட்டியலில் கேஎல் ராகுல் இணைந்துள்ளார்.
டி20 போட்டியில் 300 சிக்ஸர்கள் விளாசிய இந்தியர்கள் பட்டியலில் ஏற்கனவே ரோஹித் சர்மா, விராட் கோலி, எம்எஸ் தோனி, சுரேஷ் ரெய்னா உள்ளனர்.
சென்னை : ஏ.ஆர்.ரஹ்மான் திடீரென உடல்நிலை சரியில்லாமல் இன்று காலை 7:30 மணியளவில் நெஞ்சு வலி காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில்…
சென்னை : தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணாமாக, தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும்,…
பாகிஸ்தான் :பலுசிஸ்தான் விடுதலைப் படை (Baloch Liberation Army - BLA) பாகிஸ்தானின் நோஷ்கி பகுதியில் பாகிஸ்தான் ராணுவப் படைகளின்…
ஏடன்: அமெரிக்கா ஏமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது பெரிய அளவிலான தாக்குதல்களைத் தொடங்கியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்…
சென்னை : திடீர் உடல்நலக்குறைவால் ஏ.ஆர்.ரகுமான் சென்னை அப்போலோவில் இன்று காலை அனுமதிக்கப்பட்டார். இந்த செய்தியை கேட்ட உடன் முதல்வர்…
சென்னை : டாஸ்மாக் முறைகேடு விவகாரம் தமிழ்நாடு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமலாக்கத் துறை மார்ச் 6, 2025ல்…