16 சிக்சர்கள்..உலக சாதனையை சமன் செய்த பின் ஆலன்..!

பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே இன்று அதிகாலை 3-வது டி20 போட்டி நடைபெற்றது. முதலில் இறங்கிய நியூசிலாந்து அணி பாகிஸ்தானுக்கு 225 ரன்கள் இலக்கை நிர்ணயித்தது. பின்னர் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 20 ஓவரில் 179 ரன்கள் எடுத்தது. இதனால் இந்தப் போட்டியில் 45 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நியூசிலாந்து தொடரை கைப்பற்றியது.
5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் நியூசிலாந்து அணி 3-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இந்த போட்டியில் நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர் பின் ஆலன் உலக சாதனையை சமன் செய்துள்ளார். இந்த போட்டியில் பின் ஆலன் 62 பந்தில் 137 ரன்கள் குவித்தார். அதிலும், ஆலன் 48 பந்துகளில் சதத்தைப் பூர்த்தி செய்தார். ஆப்கானிஸ்தான் வீரர் ஹஸ்ரதுல்லா ஜசாய் ஒரு டி20 போட்டியில் அதிக சிக்ஸர் அடித்து முதலிடத்தில் உள்ளார்.
IND Vs AFG: கடைசி டி20…இந்தியா – ஆஃப்கானிஸ்தான் மோதல்..!
ஹஸ்ரதுல்லா ஒரு டி20 போட்டியில் 16 சிக்ஸர்கள் அடித்துள்ளார். இப்போது பின் ஆலனும் அதே சாதனையை செய்துள்ளார். பிப்ரவரி 2019 இல் அயர்லாந்துக்கு எதிரான போட்டியில் ஹஸ்ரத்துல்லா ஜசாய் 62 பந்துகளில் 162 ரன்கள் எடுத்தார். அதில் 11 பவுண்டரிகள், 16 சிக்ஸர்களை அடித்தார். இப்போது பின் ஆலன் 62 பந்துகளில் 137 ரன்கள் எடுத்துள்ளார். அதில் ஐந்து பவுண்டரிகள் மற்றும் 16 சிக்ஸர்களை அடித்தார்.
டி20யில் நியூசிலாந்துக்காக மூன்றாவது அதிவேக சதம் அடித்தவர் என்ற பெருமையை பின் ஆலன் பெற்றார். நியூசிலாந்து அணிக்காக அதிவேக சதம் அடித்தவர் பட்டியலில் முதலில் க்ளென் பிலிப்ஸ் உள்ளார். அவர் 46 பந்துகளில் சதத்தை பூர்த்தி செய்தவர். 2-வதாக கொலின் முன்ரோ 47 பந்துகளில் சதத்தை பூர்த்தி செய்தார். பின் ஆலன் 48 பந்துகளில் சதத்தை பூர்த்தி செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
காமராஜர் ஆட்சி : காங்கிரஸ் கட்சிக்குள் மோதல்? செல்வப்பெருந்தகை vs மாணிக்கம் தாகூர்!
February 22, 2025
AUS v ENG : முக்கிய வீரர்கள் இல்லாமல் வெற்றிபெறுமா ஆஸி…இங்கிலாந்துக்கு எதிராக பந்துவீச்சு தேர்வு!
February 22, 2025
அந்த ரூ.2500 எங்க? கேள்வி கேட்ட ஆம் ஆத்மி! உடனடியாக நிறைவேற்றிய பாஜக!
February 22, 2025
காளியம்மாள் போனால் போகட்டும்! நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேச்சு!
February 22, 2025