16 பந்து… 74 ரன்..8 சிக்சர்.. 4 பவுண்டரி…சாதனை படைத்த ஆப்கானிஸ்தான் முகமது சேஷாத்…!!
கடந்த ஆண்டு முதல் 10 ஓவர் கிரிக்கெட் தொடர் எட்டு அணிகள் பங்கேற்று துபாயில் நடந்து வருகிறது.பல்வேறு நாட்டுகளை சேர்ந்த வீரர்களும் கலந்து கொண்டு விளையாடி வருகின்றனர்.இதில் நேற்று நடந்த லீக் போட்டியில் ஷேன் வாட்சன் தலைமையில் சிந்திஸ் அணியும், பிரெண்டன் மெக்குலம் தலைமையில் ராஜ்புத்ஸ் அணியும் மோதின.
சிந்திஸ் அணி முதலில் ஆடி 10 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 94 ரன்கள் எடுத்தது.வாட்சன் 42 ரன் குவித்தார். 95 எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜ்புத்ஸ் அணி களமிறங்கிய மெக்குலமும், முகமது சேஷாத்தும் தொடக்கஆட்டக்காரர்களாக களமிறங்கினர்.அந்த அணியின் சேஷாத், பந்துகளை நாலாபுறமும் சிதறடித்து பவுண்டரி, சிக்சர் என தொடர்ந்து அவர் வெளுத்து வாங்கினார்.சேஷாத் வெறும் 16 பந்துகளில் எட்டு சிக்சர்களும் நான்கு பவுண்டரிகளுடன் 74 ரன்கள் குவித்தார்.
dinasuvadu.com