இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுக்கு இடயேயான மூன்றாவது டி20 கயானாவின் ஜார்ஜ்டவுனில் உள்ள பிராவிடன்ஸ் மைதானத்தில் நடைபெறுகிறது.இதில் டாஸ் வென்ற மேற்கிந்திய தீவு பேட்டிங்கை தேர்வு செய்தது .
முதல் இரண்டு போட்டிகளில் வெற்றிபெற்ற உற்சாகத்துடன் களமிறங்கியது மேற்கிந்திய தீவு. பிராண்டன் கிங்(42) கைல் மேயர்ஸ்(25) அதிரடியாக விளையாடினர்.முதல் விக்கெட்டாக மேயர்ஸ் 55 ரன் இருக்கும் பொழுது ஆட்டமிழக்க ஜான்சன் சார்லஸ் 12 ரன்னிற்கும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நிக்கோலஸ் பூரன் 20 ரன்னிற்கு ஆட்டமிழந்தனர்.
ஆனால் ரோவ்மன் பவல் எதிர்பார்க்காத ஆட்டத்தை வெளிப்படுத்தினார் 19 பந்துகளை சந்தித்த பவல் 40 ரன்களை எடுத்தார்,இதில் 3 சிக்ஸர் 1 பவுண்டரி எடுத்து இறுதி வரை ஆதமிழக்காமல் இருந்தார்.
ஹெட்மியர் 9 ரன்னிற்கு ஆட்டமிழக்க ரொமாரியோ ஷெப்பர்ட் 2 ரன்களை எடுத்தார்.இறுதியில் மேற்கிந்திய தீவுகள் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்களை எடுத்தது.
இந்திய பந்துவீச்சாளர்களில் குல்தீப் யாதவ் 3 விக்கெட்களையும
அக்சர் படேல் மற்றும் முகேஷ் குமார் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
இதனைத்தொடர்ந்து இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் சுப்மன் கில் களமிறங்கினர்.இஷான் கிஷனுக்கு பதிலாக களமிறங்கிய ஜெய்ஸ்வால் இப்போட்டியில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட வீரராக இருந்தார்.
ஆனால் அவர் முதல் ஓவரில் இரண்டு பந்துகள் மட்டும் சந்தித்து 1 ரன் எடுத்து ஆட்டமிழந்தார்.இதனைத்தொடர்ந்து சூர்யகுமார் யாதவ் களமிறங்கி அதிரடியாக விளையாடி வருகிறார் 4 ஓவர்கள் முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு இந்திய ஆணை 33 ரன்களை எடுத்துள்ளது.
வெஸ்ட் இண்டீஸ் : பிராண்டன் கிங், கைல் மேயர்ஸ், ஜான்சன் சார்லஸ், நிக்கோலஸ் பூரன்(wk), ரோவ்மன் பவல்(c), ஷிம்ரோன் ஹெட்மியர், ரொமாரியோ ஷெப்பர்ட், ரோஸ்டன் சேஸ், அக்கேல் ஹொசைன், அல்சாரி ஜோசப், ஓபேட் மெக்காய்
இந்தியா ;சுப்மன் கில், யஷஸ்வி ஜெய்ஸ்வால், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா(c), சஞ்சு சாம்சன்(wk), அக்சர் படேல், குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங், யுஸ்வேந்திர சாஹல், முகேஷ் குமார்
சென்னை : சீமான் தலைமையில் 2010ஆம் ஆண்டு மே மாதம் ஆரம்பிக்கப்பட்ட கட்சி 'நாம் தமிழர் கட்சி'. அப்போது முதல்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை நடிகர் விஜய் தொடங்கி வரும் பிப்ரவரி மாதத்தோடு ஓராண்டு நிறைவு…
டெல்லி : விண்வெளியில் இரண்டு செயற்கை கோள்களை ஸ்பேஸ் டாக்கிங் (Space Docking) செயல்முறை மூலம் இணைக்கும் நோக்கத்திற்காக ஸ்ரீஹரிகோட்டாவில்…
சென்னை: தமிழக சட்டப்பேரவையில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இடையே காரசார விவாதம் நடந்தது.…
மதுரை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அண்மையில் கடலூர் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்புகளின் போது…
சீனா : கார் ஒட்டிக்கொண்டு சாலையில் வேகமாக செல்லும் போது சில சமயங்களில், சாலைகளில் இருக்கும் மேடு பள்ளங்களை கவனிக்காமல்…