அதிரடி காட்டிய ஸ்டாய்னிஸ்.. பஞ்சாபிற்கு 158 ரன்கள் இலக்கு..!
ஐபிஎல் டி20 தொடரின் 2-வது லீக் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் – கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதுகின்றன. இப்போட்டி துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்து வீச தேர்வு செய்தது.
டெல்லி அணியில் தொடக்க வீரர்களாக பிருத்வி ஷா, ஷிகர் தவான் களமிறங்கினர். ஆட்டம் தொடக்கத்திலேயே தவான் ரன் ஏதும் எடுக்காமல் ரன் அவுட் ஆனார். இதையடுத்து, பிருத்வி ஷா 5 ரன்னில் வெளியேற பின்னர், இறங்கிய ஹெட்மியர், சொற்ப ரன்களில் வெளியேறினர்.
பின்னர், ஸ்ரேயாஸ் ஐயர் , ரிஷாப் பண்ட் இவர்களின் கூட்டணியின் மூலம் டெல்லி அணியின் எண்ணிக்கை சற்று உயர்ந்தது. சிறப்பாக இருவரும் விளையாடி வந்த நிலையில், ஸ்ரேயாஸ் ஐயர் 39, ரிஷாப் பண்ட் 31 ரன்னுடன் வெளியேறினார்.
டெல்லி அணி தடுமாறி விளையாடி வந்த நிலையில் மத்தியில் இறங்கிய மார்கஸ் ஸ்டாய்னிஸ் அதிரடியாக விலையாடி 53 ரன்கள் குவித்தார். இறுதியாக டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழந்து 157 ரன்கள் எடுத்தனர். 158 ரன்கள் இலக்குடன் பஞ்சாப் அணி களமிறங்க உள்ளது.