தோனியுடன் 15 ஆண்டுகள் நிறைவு; கொண்டாடும் சிஎஸ்கே.!
ஐபிஎல்இல் தோனி, சிஎஸ்கே அணியுடன் இணைந்து 15 ஆண்டுகள் முடிந்ததை சிஎஸ்கே தனது ட்விட்டரில் புகைப்படத்தை பதிவிட்டு கொண்டாடியுள்ளது.
ஐபிஎல் 2008 ஆம் ஆண்டில் அறிமுகமானதிலிருந்து சிஎஸ்கே அணிக்கு தலைமை வகித்து வரும் மகேந்திரசிங் தோனி, அணியுடன் இணைந்து 15 ஆண்டுகள் நிறைவடைந்ததைக் கொண்டாடும் வகையில் சிஎஸ்கே அணி நிர்வாகம் தனது ட்விட்டரில் தோனியின் புகைப்படத்தை பதிவிட்டுள்ளது. தல என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் தோனிக்கு, இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் தான் கடைசி தொடராக இருக்கும் என்று கூறப்படுகிறது.
மேலும் தோனி கடந்த ஐபிஎல் தொடரின் போது சென்னையில் தான் எனது கடைசி ஆட்டம் இருக்கும், சென்னை ரசிகர்கள் மத்தியில் நன்றி கூறிவிட்டு தான் நான் விடைபெறுவேன் என கூறியிருந்தார். இந்த வருடம் ஐபிஎல் தொடரில் மார்ச் 31 இல் நடைபெறும் முதல் ஆட்டத்தில் சென்னை மற்றும் குஜராத் அணிகள் மோதுகின்றன. மேலும் சிஎஸ்கே அணி சென்னையில் தனது கடைசி ஆட்டத்தை மே 14 இல் விளையாடுகிறது.
இதனால் தோனிக்கு இது கடைசி ஆட்டமாக அமையும் பட்சத்தில் மே 14 அன்று சென்னையில் பிரிவு உபசார விழா நடைபெறும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. தோனி தலைமையில் சிஎஸ்கே அணி 4 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. தோனியை கவுரவிக்கும் விதமாக சிஎஸ்கே தனது ட்விட்டரில், தல எங்களது எல்லோவே(Yellove ) குடும்பத்தில் அடியெடுத்து வைத்து 15 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன, சிஎஸ்கேவின் பெருமை- தோனி என்று ட்வீட் செய்துள்ளது.
The happening of a phenomenon 1️⃣5️⃣ years ago! When Thala stepped into our lives in Yellove! ????#WhistlePodu #VaaThala #Yellove ???????? pic.twitter.com/VeG4TJ5m0m
— Chennai Super Kings (@ChennaiIPL) February 20, 2023