மகளிர் டி20 உலகக் கோப்பைக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிப்பு

Default Image

2023 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் நடைபெறவுள்ள மகளிர் டி20 உலகக் கோப்பைக்கான 15 பேர் கொண்ட இந்திய மகளிர் அணியை பிசிசிஐ புதன்கிழமை அறிவித்துள்ளது.

இந்திய அணிக்கு பேட்டர் ஹர்மன்பிரீத் கவுர் கேப்டனாகவும் , ஸ்மிருதி மந்தனா துணை கேப்டனாக இருக்கின்றனர். இந்திய அணியின் வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் ஷிகா பாண்டே, ஒரு வருடத்திற்கும் மேலாக விளையாடாமல் இருந்த இந்திய உலகக் கோப்பை அணியில் திரும்ப அழைக்கப்பட்டுள்ளார்.

ஹர்மன்ப்ரீத் கவுர் (கேப்டன்), ஸ்மிருதி மந்தனா (துணை கேப்டன்), ஷஃபாலி வர்மா, யாஸ்திகா பாட்டியா (வாரம்), ரிச்சா கோஷ் (வாரம்) ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஹர்லீன் தியோல், தீப்தி சர்மா, தேவிகா வைத்யா, ராதா யாதவ், ரேணுகா தாக்கூர், அஞ்சலி சர்வானி வஸ்த்ரகர், ராஜேஸ்வரி கயக்வாட், ஷிகா பாண்டே ஆகியோர் இடப்பெற்றுள்ளனர்.

இதில் இடப்பெற்றுள்ள  புஜா வஸ்த்ரகரும் அவர் தனது உடற்தகுதிக்கு உட்பட்டு விளையாடுவார் என்று பிசிசிஐ  தெரிவித்துள்ளது.சப்பினேனி மேகனா, சினே ராணா, மேக்னா சிங் என 3 வீரர்களை தக்கவைத்துள்ளது.

தென்னாப்பிரிக்காவில் நடைபெறும் முத்தரப்பு தொடருக்கான இந்திய மகளிர் அணியையும் பிசிசிஐ அறிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்