ஆசிய கோப்பை 2018::தவான் அபார சதம் …!14 வது சதம் அடித்து தவான் சாதனை …!
இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் தவான் ஒரு போட்டிகளில் தனது 14 வது சதத்தை அடித்துள்ளார்.
ஆசிய கோப்பைக்கான கிரிக்கெட் தொடர் கடந்த செப்டம்பர் 15ஆம் தேதி ஐக்கிய அரபு நாடுகளில் தொடங்கியது.
இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கை, ஆப்கானிஸ்தான், ஹாங்காங் ஆகிய 6 நாடுகள் பங்கேற்கும் இத்தொடருக்கான இந்திய அணி வீரர்கள் மும்பையில் கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி தேர்ந்தெடுக்கப்பட்டனர். இத்தொடரிலிருந்து இந்திய அணியின் கேப்டன் விராட் கோலிக்கு ஓய்வளிக்கப்பட்டது.ஆசிய கோப்பையில் விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டு ரோகித் ஷர்மா தலைமையில் இந்திய கிரிக்கெட் அணி அறிவிக்கப்பட்டது.
வருகின்ற 19ஆம் தேதி இந்திய அணி தனது நிரந்தர எதிரியான பாகிஸ்தான் அணியை எதிர்கொள்கின்றது.ஆனால் இதற்கு முந்தைய நாளான இன்று 18 ஆம் தேதி இந்திய அணிக்கு ஹாங்காங் அணியுடன் விளையாட உள்ளது.
இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஹாங்காங் அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதையடுத்து களமிறங்கிய இந்திய அணியில் கேப்டன் ரோகித் 23 ரன்களில் தனது விக்கெட்டை பறி கொடுத்தார்.இந்நிலையில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் தவான் ஒரு போட்டிகளில் தனது 14 வது சதத்தை அடித்துள்ளார்.105 பந்துகளில் சத்தம் அடித்துள்ளார்.
தற்போது வரை இந்திய அணி 36 ஓவர்களில் 2 விக்கெட்டை இழந்து 198 ரன்கள் அடித்துள்ளது.களத்தில் தவான் 100,தினேஷ் 13 ரன்களுடனும் உள்ளனர்.
அதேபோல் ராயுடு 60 ரன்களில் தனது விக்கெட்டை பறிகொடுத்துள்ளார்.