சொதப்பலாக விளையாடிய விண்டீஸ்; பங்காளதேஷ்க்கு 143 ரன் இலக்கு!

Published by
murugan

வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டை இழந்து 142 ரன்கள் எடுத்தனர்.

ஐசிசி T20 உலகக் கோப்பை தொடரின் இன்றை தினத்தில் இரண்டு போட்டிகள் நடைபெறுகிறது. முதல் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியும், பங்களாதேஷ்  அணியும் மோதி வருகிறது. போட்டியில் டாஸ் வென்ற பங்களாதேஷ் அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது.

வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க வீரராக கிறிஸ் கெய்ல், எவின் லூயிஸ் இருவரும் களமிறங்கினர். ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே கிறிஸ் கெய்ல் 4, எவின் லூயிஸ் 6 ரன்கள் எடுத்து அடுத்தடுத்து விக்கெட்டை இழந்தனர். பின்னர் களமிறங்கிய ஷிம்ரோன் ஹெட்மியர் வந்த வேகத்தில் 9 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

அடுத்து இறங்கிய கீரன் பொல்லார்ட் 8 ரன் எடுத்த போது மைதானத்தை விட்டு வெளியேறினார். அடுத்து வந்த ஆண்ட்ரே ரஸ்ஸல் ஒரு பந்து கூட சந்திக்காமல் ரன் அவுட் ஆனார். பிறகு ரோஸ்டன் சேஸ்,  நிக்கோலஸ் பூரன் இருவரும் ஜோடி சேர்ந்து சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் எண்ணிக்கையை உயர்த்தினர். அதிரடியாக விளையாடிய நிக்கோலஸ் பூரன் 40 ரன்கள் எடுத்தார். அதில், 4 சிக்ஸர் , 1 பவுண்டரி அடங்கும்.

அடுத்த பந்திலே ரோஸ்டன் சேஸ் போல்ட் ஆகி 39 ரன் எடுத்து பெவிலியன் திரும்பினார். இறுதியாக வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டை இழந்து 142 ரன்கள் எடுத்தனர். பங்களாதேஷ் அணியில் ஷரீபுல் இஸ்லாம், முஸ்தாபிசுர் ரஹ்மான், மெஹ்தி ஹசன் தலா 2 விக்கெட்டை பறித்தனர்.

Published by
murugan

Recent Posts

ராஜினாமா செய்ய தயாரா? பாஜகவுக்கு சவால் விட்ட செல்வப்பெருந்தகை!

ராஜினாமா செய்ய தயாரா? பாஜகவுக்கு சவால் விட்ட செல்வப்பெருந்தகை!

சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவை கூடிய நிலையில், காவல்துறை மானியக் கோரிக்கை குறித்த விவாதம் நடைபெற்று வருகிறது. சட்டப்பேரவையில்…

10 minutes ago

7ஆம் வகுப்பு பாடத்திட்டத்தில் முகலாயர் பாடங்கள் நீக்கம்.., கும்பமேளா சேர்ப்பு?

டெல்லி : தேசிய கல்விக் கொள்கையை மத்திய அரசு நடத்தும் பள்ளிகளிலும், தேசிய கல்வி கொள்கையை பின்பற்றும் தனியார் பள்ளிகளும்…

2 hours ago

“தமிழ்நாட்டில் எந்த விதத்திலும் மதவாதம் நுழைய முடியாது” – முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்.!

சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு முக்கிய 9 அறிவிப்புகளை அறிவித்தார்.…

2 hours ago

காஷ்மீர் தாக்குதல் : பிபிசி தொலைக்காட்சி மீது மத்திய அரசு அதிருப்தி.!

டெல்லி : கடந்த வாரம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து செய்தி வெளியிட்டதற்காக…

2 hours ago

தமிழ்நாடு போலீசுக்கு நாங்க என்னென்ன செய்திருக்கோம் தெரியுமா? முதலமைச்சர் போட்ட பட்டியல்…

சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காவல்துறை மானியம் தொடர்பான கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது அரசு…

2 hours ago

அடிக்குற வெயிலுக்கு மழை அப்டேட்.! இந்த 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.!

சென்னை : தமிழகம் முழுவதும் கடந்த மார்ச் மாதத்திலிருந்து கடும் வெப்பம் கொளுத்தி வருகிறது. இந்த வேளையில், சில இடங்களில்…

3 hours ago