இறுதி போட்டியின் ஒரு டிக்கெட் விலை 14 லட்சம் அதிர்ச்சியில் ரசிகர்கள் !

உலகக்கோப்பை தொடரின் இறுதி போட்டி நாளை லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற உள்ளது.இப்போட்டியில் இங்கிலாந்து அணியும் ,நியூஸிலாந்து அணியும் மோத உள்ளது.
இந்நிலையில் உலகக்கோப்பை வரலாற்றில் 27 வருடங்கள் கழித்து இங்கிலாந்து அணி இறுதி போட்டிக்கு சென்று உள்ளது.சொந்த மண்ணில் இறுதி போட்டி நடப்பதால் இங்கிலாந்து அணி ரசிகர்கள் இறுதி போட்டியை காண அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இறுதி போட்டிகளுக்கான டிக்கெட்டை ஐசிசி தங்களது அதிகாரப்பூர்வ இணைதளத்தில் விற்பனை செய்து வருகிறது.மறுபுறம் ஐசிசி அங்கீகரித்த மையங்கள் டிக்கெட்டை விற்பனை செய்து வருகின்றனர்.
இந்த மையங்கள் பிரீமியம் டிக்கெட்டை 14 லட்சத்திற்கு விற்பனை செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.இதனால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்து உள்ளனர்.இந்நிலையில் ஐசிசி ஒரு அறிவிப்பை அறிவித்து உள்ளது.அதில் தங்களால் அங்கீகரித்த மையங்கள் மூலமாக டிக்கெட் வாங்க வேண்டும் இல்லையென்றால் மைதானத்திற்குள் அனுமதிக்கமாட்டார்கள் என கூறியுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
வடிவேலு – சுந்தர்.சியின் அடுத்தடுத்த காமெடி அட்டகாசம்.., கேங்கர்ஸ் படத்தின் புதிய ட்ரைலர் இதோ…
April 1, 2025
“எங்கள் ஊரில் தமிழ், தெலுங்கு, மலையாளம் சொல்லி தருகிறோம்..,” யோகி ஆதித்யநாத் பெருமிதம்!
April 1, 2025