ஐபிஎல் 2024: பந்து வீச்சில் மிரட்டிய சென்னை… 137 ரன்களுக்கு சரிந்த கொல்கத்தா..!
ஐபிஎல் 2024 : முதலில் களமிறங்கிய கொல்கத்தா அணி 20 ஓவரில் 9 விக்கெட்டை இழந்து 137 ரன்கள் எடுத்தனர்.
ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் சென்னையும், கொல்கத்தாவும் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மோதி வருகிறது. டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்து வீச தேர்வு செய்தனர். அதன்படி கொல்கத்தா அணியின் தொடக்க வீரர்களாக பிலிப் சால்ட், சுனில் நரைன் இருவரும் களமிறங்கினர்.
ஆட்டம் தொடங்கிய முதல் பந்திலே பிலிப் சால்ட் ரவீந்திர ஜடேஜாவிடம் கேட்சை கொடுத்து கோல்டன் டக் அவுட் ஆகி வெளியேறினார். அடுத்து ரகுவன்ஷி களமிறங்க ஏற்கனவே களத்தில் இருந்த சுனில் நரைன் இருவரும் கூட்டணி சேர்ந்து இருவரும் சிறப்பாக ரன்கள் சேர்த்தனர்.
பவர் பிளேவின் கடைசி ஓவரான 6-ஓவரை ரவீந்திர ஜடேஜா வீசினார். முதல் பந்தில் ரகுவன்ஷி 24 ரன்கள் எடுத்து விக்கெட்டை இழந்தார். அடுத்து கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் களமிறங்க அதே ஓவரில் 5 பந்தில் மற்றொரு வீரரான சுனில் நரைன் 27 ரன் எடுத்து தீக்ஷனாவிடம் கேட்சை கொடுத்து வெளியேறினார்.
அடுத்து வந்த வீரர்கள் நிலைத்து நிற்காமல் வெங்கடேஸ் ஐயர் 3 , ரமன்தீப் சிங் 13, ரிங்கு சிங் 9, ஆண்ட்ரே ரஸ்ஸல் 10 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்து பெவிலியன் திரும்பினர். இறுதியாக கொல்கத்தா அணி 20 ஓவரில் 9 விக்கெட்டை இழந்து 137 ரன்கள் எடுத்தனர்.
சென்னை அணியில் ரவீந்திர ஜடேஜா, தேஷ்பாண்டே தலா 3 விக்கெட்டையும், முஸ்தாபிசுர் ரஹ்மான் 2 விக்கெட்டையும், மகேஷ் தீக்ஷனா 1 விக்கெட்டையும் பறித்தனர்.