இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவு போடுவதற்கு விராட் கோலிக்கு ரூ.1,35,66,749 இவ்வளவு பணமா!

Default Image

இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவு  செய்வதற்கு அதிக தொகையை பெறும் விளையாட்டு வீரர்களில் விராட் கோலி ஒன்பதாவது இடத்தில் உள்ளார். முதலிடத்தில் போர்ச்சுக்கல் கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ உள்ளார்.

சமூக வலைத் தளங்களில் ஒன்றாக இருக்கும் இன்ஸ்டாகிராமில் அரசியல் தலைவர்கள் , தொழிலதிபர்கள், நடிகை , நடிகர்கள், விளையாட்டு வீரர்கள் ஆகியோர் கணக்குகளை தொடங்கி பதிவுகளையும் , புகைப்படங்கள் பதிவு செய்து வருகின்றன.

இதில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி இன்ஸ்டாகிராமை 3.6 கோடி பேர் பின் தொடருகின்றனர். இந்நிலையில் விராட் கோலி இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவு செய்வதற்கு ரூ.1,35,66,749 பெறுகிறார்.

முதலிடத்தில் கிறிஸ்டினோ ரொனால்டோ ரூபாய் 6,73,49,082 பெறுகிறார்.இரண்டாவது இடத்தில் கால்பந்து வீரர் நெய்மரும் , மூன்றாவது இடத்தில் அர்ஜென்டினா கால்பந்து வீரர் லயோனல் மெஸ்ஸியும் , நான்காவது இடத்தில் டேவிட் பெக்காமும் உள்ளார்.

முதல் 10 இடங்களில் இடம் பெற்றுள்ள விளையாட்டு வீரர்களில் விராட் கோலி மட்டுமே கிரிக்கெட் வீரர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்