ஐபிஎல் வரலாற்றில் 13 வயது இளம் வீரர்..!! கிரிக்கெட் உலகை கலக்குவாரா ‘வைபவ் சூர்யவன்ஷி’?
ஐபிஎல் வரலாற்றில் ஒரு அணிக்காக ஒப்பந்தம் செய்த இளம் வீரர் என்ற பெருமையை படைத்துள்ளார் வைபவ் சூர்யவன்ஷி
மும்பை : ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் கடந்த 2 நாட்களாக விறுவிறுப்பாக நடைபெற்றது. அதில், பல வரலாறை புரட்டி போடும் சாதனைகள் நிகழ்ந்தது. அதன்படி, 13 வயதில் ஒரு வீரர் ராஜஸ்தான் அணிக்காக ஒப்பந்தம் ஆகி இருக்கிறார்.
இது, ஐபிஎல் வரலாற்றில் நிகழ்ந்த முதல் நிகழ்வாகும். அதிலும், அவரை ரூ.1.10கோடிக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஏலத்தில் எடுத்துள்ளது. இது ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.
ஏலம் சென்ற இளம் வீரர் :
ஐ.பி.எல் வரலாற்றில் மிகக் குறைந்த வயதில் கிரிக்கெட் வீரர் ஒருவர் விடப்பட்டது இதுவே முதல் முறையாகும். அடிப்படை விலையாக ரூ.30 லட்சத்திற்கு ஏலத்திற்கு வந்த அவரை ராஜஸ்தான் அணி முதலில் ஏலத்தில் கேட்டது, அதனைத் தொடர்ந்து டெல்லி அணியும் அந்த ஏலத்தில் வந்தது.
இருவருக்கும் இடையே நடந்த இந்த ஏல சண்டையில் இறுதியில் ராஜஸதன் ராயல்ஸ் அணி, வைபவ் சூர்யவன்ஷியை ரூ.1.10 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளனர்.
யார் இந்த வைபவ் சூர்யவன்ஷி?
இந்தியாவின் உள்ளூர் தொடராக நடைபெறும் கிரிக்கெட் போட்டிகளில் ஒன்றான ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் தனது 12 வயதில் வைபவ் களமிறங்கியுள்ளார். இடது கை பேட்ஸ்மேனான அவர் அதனைத் தொடர்ந்து விளையாடி சமீபத்தில் தான் 19 வயதுக்குட்பட்ட இந்திய அணியில் இடம்பிடித்தார்.
சென்னையில் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்டோருக்கான அவுஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 58 பந்துகளில் சதம் அடித்து கிரிக்கெட் ரசிகர்கள் மீது கவனத்தை ஈர்த்து பலத்த பாராட்டும் பெற்றார்.
அதே போல, பிஹாரில் நடைபெற்ற ரந்திர் வர்மா கோப்பை தொடரில் ஒரு போட்டி ஒன்றில் 300 அடித்து அசத்தியிருந்தார். மேலும், அவர் ஒரு இடதுகை சுழல்பந்து வீச்சாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
கிரிக்கெட்டை கலக்குவாரா வைபவ் சூர்யவன்ஷி?
இந்தியா முன்னாள் வீரரும், கிரிக்கெட் கடவுள் என அழைக்கப்படுபவருமான சச்சின் டெண்டுல்கர் தனது 17 வயதில் கிரிக்கெட்டில் அறிமுகமாகி கிரிக்கெட் உலகை ஒரு கலக்கு கலக்கினார்.
அதே போல அவரை விட 4 வருடங்களுக்கு அதாவது 13 வயதிலே வைபவ் கிரிக்கெட் உலகிற்கு வந்துவிட்டார். இதனால், அவர் கிடைக்கின்ற வாய்ப்பை மட்டும் சரியாக பயன்படுத்தினால் சச்சின், விராட் கோலி போன்றவர்களின் சாதனையை முறியடிக்க அதிக வாய்ப்புகள் இருக்கிறது.
மேலும், ராஜஸ்தான் அணிக்காக தேர்வாகி இருக்கும் இவர், வாய்ப்பு கிடைத்தால் தனது வாய்ப்பை சரியாக அதனை பயன்படுத்தினாலே 19-20 வயதில் இந்திய அணிக்காக தேர்வாகிவிடுவார் எபத்தில் சந்தேகமில்லை.