நேற்று நடந்த மும்பை அணிக்கு எதிரான போட்டியில் தோல்வியடைந்தது குறித்து ஹர்திக், இது ஒரு பிரச்சினை இல்லை, இன்னும் 13 ஆட்டங்கள் இருக்கு என்று கூறினார்.
புதிய கேப்டனான ஹர்திக் பாண்டியாவின் மும்பை இந்தியன்ஸ் அணி, நேற்றைய தினம் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் தொடக்க ஆட்டத்தில் 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. தோல்விக்கு பின் பேசிய மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஆன பாண்டியா பேசுகையில் ‘இன்னும் 13 போட்டிகள் உள்ளதால் அது ஒரு பிரச்சினை இல்லை’ என்று கூறியுள்ளார்.
அகமதாபாத் மைதானத்தில் நடந்த 4ஆவது போட்டியில், முதலில் பேட்டிங் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவரில் 168 ரன்கள் குவித்தது. 169 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவரில் 162 ரன்களுக்கு வீழ்த்தி, 6 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் அணி வெற்றி பெற்றது.
போட்டி முடிந்து பின் தோல்வி குறித்து பேசிய மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா, “சில விக்கெட்டுகளை அடுத்தடுத்து இழந்ததால் கொஞ்சம் தடுமாறினோம், இந்த தோல்வி எல்லாம் ஒரு பிரச்னையே கிடையாது. இன்னும் 13 போட்டிகள் இருக்கிறது. அவற்றில் நாங்கள் சிறப்பாக விளையாடுவோம்” எனக் கூறினார்.
மேலும், வெற்றி குறித்து குஜராத் அணியின் கேப்டன் ஆன சுப்மன் கில் பேசுகையில், “பனி பொழிந்ததால் ட்யூ (Dew) ஏற்பட்டது ஆனால் அப்போது கூட, ரஷித் மற்றும் சாய் இருவரும் போட்டியில் அற்புதமாகப் பந்து வீசினார்கள். நாங்கள் 170 ரன்கள் எடுத்தால் இன்னும் ஆறுதலாக இருந்திருக்கும், ஆனால் நாங்கள் 10 ரன்கள் குறைவாக தான் இருந்தோம். இதெல்லாம் கிரிக்கெட் விளையாட்டில் ஒரு அங்கம் தான்” எனக் கூறினார்.
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…