பிசிசிஐ அளித்த ரூ.125 கோடி பரிசு தொகை ..! யார் யாருக்கு எவ்வளவு தெரியுமா ..?

BCCI Indian Team Prize Money [file image]

பிசிசிஐ : நடைபெற்ற உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி வெற்றி பெற்றதற்கு பிசிசிஐ பரிசுத்தொகையாக ரூ.125 கோடிக்கு அளித்துள்ளனர். அதனை இந்திய வீரர்கள் எப்படி பிரித்துக்கொள்வார்கள் என்பதை பார்க்கலாம்.

இந்த ஆண்டில் நடைபெற்று முடிந்த 20 ஓவர் உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி தென்னாபிரிக்கா அணியை இறுதி போட்டியில் 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 2-வது முறையாக டி20 கோப்பையை வென்றுள்ளது. இந்த வெற்றியை ஊக்குவிக்க இந்திய கிரிக்கெட் வாரியத்தின் (BCCI) செயலாளரான ஜெய்ஷா, பிசிசிஐ சார்பாக ரூ.125 கோடியை இந்திய அணிக்காக பரிசளித்தார்.

பிசிசிஐ வழங்கிய இந்த ரூ.125 கோடியை இந்தியா அணியில் இடம்பெற்ற வீரர்கள், பயிற்சியாளர்கள் என அனைவருக்கும் பிரித்து கொடுப்பார்கள். அது எப்படி பிரித்து கொடுக்கிறார்கள் என்பதை தற்போது பார்க்கலாம். அதன்படி விளையாடிய 11 வீரர்கள் உட்பட விளையாடாத 4 வீரர்கள் என மொத்தம் 15 வீரர்களுக்கு தலா ரூ.5 கோடி வழங்குவார்கள்.

அதன்பின், தலைமை பயிற்சியாளர் டிராவிட் , பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர், பந்து வீச்சு பயிற்சியளர் பராஸ் மாம்ப்ரே, ஃபீல்டிங் பயிற்சியாளர் டி.திலீப் என தலா ஆளுக்கு 2.5 கோடிகள் வீதம் பயிற்சியாளர்களுக்கு மட்டும் ரூ.10 கோடி வழங்குவார்கள். அதனை தொடர்ந்து இந்திய அணியின் 3 பிசியோதெரபிஸ்ட்கள், 3 த்ரோடவுன் நிபுணர்கள், 2 மசாஜ் தெரபிஸ்ட்கள் மற்றும் 2 ஸ்ட்ரென்த் & கண்டிஷனிங் பயிற்சியாளர்கள் என 10 பேருக்கு தலா 2 கோடி ரூபாய் வழங்கப்படுகிறது.

இறுதியாக, இந்திய அணியின் ரிசர்வ் வீரர்களாக இடம்பெற்றிருந்த ரிங்கு சிங், சுப்மன் கில், கலீல் அகமது மற்றும் ஆவேஷ் கான் ஆகிய 4 வீரர்களுக்கும் தலா ரூ.1 கோடி வழங்படுகிறது. மேலும், இந்திய அணியின் அஜித் அகர்கர் தலைமையிலான 5 பேர் கொண்ட தேர்வாளர்களான குழுவிற்கு தலா ரூ. 1 கோடி வழங்கப்படுகிறது. இவ்வாறு இந்த பரிசு தொகையை இந்த வெற்றியில் பங்களிப்பில் ஈடுபட்ட அனைவருக்கும் பிரித்து கொடுப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்