124 ரன்களுக்குள் சுருண்டது தென் ஆப்பிரிக்க அணி.. இலங்கை அணி பந்துவீச்சில் ஆதிக்கம்
தென்ஆப்பிரிக்கா இலங்கை அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி கொழும்புவில் நடைபெற்று வருகிறது இதில் தென் ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்சில் 121 ரன்களுக்குள் சுருண்டது.
முதல் டெஸ்ட் போட்டியில் அபாரமாக வென்ற பிறகு, இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இரு அணிகளும் கொழும்பு மைதானத்தில் நேற்று ஆடினர்.
டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங் செய்ய முடிவு செய்தது. அதில் துவக்க வீரர்கள் குணதிலகா, கருணரத்னே இருவரும் சிறப்பான துவக்கம்துவக்கம் அமைத்துக் கொடுத்தனர். இருவரும் அரைசதம் அடித்து வெளியேறினர்.
அதன்பின் டி சில்வா சிறப்பாக ஆடி அரைசதம் கண்டார். அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழ இறுதியில் இலங்கை அணி 338 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது முதல் இன்னிங்சில். தென்னாபிரிக்க அணியின் சார்பாக கேசவ மகராஜ் 9 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
அதனைத் தொடர்ந்து பேட்டிங் செய்த தென்ஆப்பிரிக்கா அணி துவக்கம் முதலே தடுமாற்றத்தை கண்டது. மிடில் ஆடர்களில் கேப்டன் டு பிளேசிஸ் மற்றும் டி காக் இருவரும் சிறிது நேரம் களத்தில் நிலைத்திருந்தாலும் அதுவும் நீடிக்கவில்லை.
இறுதியில் தென் ஆப்பிரிக்கா அணி முதல் இன்னிங்சில் 124 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
அதை தொடர்ந்து இரண்டாவது இன்னிங்சை இலங்கை அணி தொடர்ந்தது. குணதிலக மற்றும் கருணரத்னே இருவரும் அரைசதம் அடித்தனர்.
இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் இலங்கை அணி 3 விக்கெட் இழப்பிற்கு 151 ரன்கள் எடுத்தது. கருணரத்னே மற்றும் மேத்யூஸ் இருவரும் களத்தில் இருந்தனர்.