ரோகித் மற்றும் ரகானே சிறப்பாக விளையாடி வருகின்றனர்.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பேட்டிங் தேர்வு செய்தார்.பேட்டிங்கை தொடங்கிய இந்திய அணிக்கு சிறப்பான தொடக்கம் அமையவில்லை.கில்,கேப்டன் கோலி டக் -அவுட், புஜாரா 21 ரன்களில் ஆட்டமிழந்தார்கள்.இந்திய அணி 86 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து திணறி வந்தது.ஆனால் மறுபுறம் ரோகித் சிறப்பாக விளையாடி வந்தார்.
தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழந்த நிலையில் ரோகித் மற்றும் ரகானே ஆகிய இருவரும் ஜோடி சேர்ந்தனர்.சிறப்பாக விளையாடிய ரோகித் சதம் அடித்தார்.தற்போது ரோகித் மற்றும் ரகானே ஜோடி 100 ரன்களை அடித்துள்ளது.56 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து,189 ரன்கள் அடித்துள்ளது. இங்கிலாந்து அணியின் பந்துவீச்சில் லீச் ,அலி ,ஸ்டோன் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தியுள்ளனர்.ரோகித் சர்மா 132 ரன்களுடனும் ,ரகானே 36 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
சென்னை: தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரின் மூன்றாவது நாள் இன்று நடைபெற்று வரும் நிலையில், அண்ணா பல்கலை மாணவிக்கு நடந்த பாலியல்…
சென்னை :திருவாதிரை ஸ்பெஷல் களி ரெசிபி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; பச்சரிசி-…
சென்னை: நடிகை நயன்தாராவின் 'Beyond the Fairy Tale' ஆவணப்படத்தில் 'நானும் ரவுடி தான்' படத்தின் காட்சிகளை அனுமதியின்றி பயன்படுத்தியதாகக்…
சென்னை: ராக்கிங் ஸ்டார் யாஷ் நடிப்பில் 'KGF 2' திரைப்படம் கடந்த 2022ம் ஆண்டு வெளியானதைத் தொடர்ந்து அவரது அடுத்த…
சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரின் மூன்றாவது நாள் இன்று நடைபெற்று வரும் நிலையில், அண்ணா பல்கலை மாணவிக்கு நடந்த…
சென்னை: மகளிருக்காக தமிழக அரசு சார்பில் 'கலைஞர் மகளிர் உரிமைத்தொகை' திட்டதின் கீழ், ஒவ்வொரு மாதமும் 15ம் தேதி மகளிர்…