டெஸ்ட் கிரிக்கெட்டில் 100… நேத்தன் லயன் படைக்கபோகும் புதிய சாதனை.!

Nathan Lyon 100

ஆஸ்திரேலியாவின் நேத்தன் லயன், தொடர்ச்சியாக 100 டெஸ்ட்களில் விளையாடும் முதல் பவுலர் என்ற சாதனை படைக்கவுள்ளார்.

இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையில் இன்று நடக்கும் இரண்டாவது ஆஷஸ் டெஸ்ட்டில் களமிறங்கும் நேத்தன் லயன், தொடர்ச்சியாக ஆஸ்திரேலிய அணிக்காக 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி பந்துவீச்சாளராக புதிய சாதனை படைக்கவுள்ளார். இதுவரை எந்த பவுலரும் டெஸ்ட்களில் தொடர்ந்து 100 போட்டிகளில் களமிறங்கியதில்லை.

சுழற்பந்து வீச்சாளரான நேத்தன் லயன், ஆஸ்திரேலிய அணிக்காக டெஸ்ட்களில் மிகப்பெரும் பங்காற்றியிருக்கிறார். 121 டெஸ்ட்களில் விளையாடியுள்ள 35 வயதான நேத்தன் லயன், 495 டெஸ்ட் விக்கெட்களை வீழ்த்தியிருக்கிறார். தற்போது விளையாடிக்கொண்டிருக்கும் வீரர்களில் ஆண்டர்சன் (686), பிராட் (588) விக்கெட்களுடன் இவருக்கு முன்னதாக இருக்கின்றனர்.

பர்மிங்காமில் நடைபெற்ற முதல் ஆஷஸ் டெஸ்ட்டில் 8 விக்கெட்கள் வீழ்த்திய நேத்தன் லயன், இன்று நடைபெறும் லார்ட்ஸ் டெஸ்ட்டில் 100 டெஸ்ட்களில் தொடர்ச்சியாக களமிறங்கவுள்ள முதல் பவுலர் என்ற வரலாற்று சாதனை நிகழ்த்த இருக்கிறார்.

இவருக்கு முன்னதாக அலைஸ்டர் குக்(159), ஆலன் பார்டர்(153), மார்க் வாக்(107), சுனில் கவாஸ்கர்(106) மற்றும் ப்ரெண்டன் மெக்கல்லம் (101) ஆகியோர் தொடர்ச்சியாக 100 போட்டிகளில் ஒரு அணிக்காக களமிறங்கியுள்ளனர். இதில் நேத்தன் லயன் மட்டுமே பந்துவீச்சாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்