100 கோடிக்கும் அதிகமாக கிரிக்கெட் ரசிகர்கள்!ஐசிசி ஆய்வில் ருசீகர தகவல்!

Published by
Venu

ஐசிசி நடத்திய சந்தை ஆய்வில் உலகம் முழுதும் கிரிக்கெட்டுக்கு எத்தனை ஆதரவு இருக்கிறது என்று  சுமார் 100 கோடிக்கும் அதிகமாக கிரிக்கெட்டை ரசிகர்கள் விரும்புவது தெரியவந்துள்ளது, இதில் 90% துணைக்கண்ட ரசிகர்கள். ரசிகைகளின் எண்ணிக்கை 39%.

Image result for indian cricket fans

14 நாடுகளில் சுமார் 1 பில்லியன் பேர் கிரிக்கெட்டுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர், இதில் 90% துணைக்கண்ட ரசிகர்கள்.

100கோடிக்கும் மேல் கிரிக்கெட் ரசிகர்கள் உலகம் முழுதும் உள்ளனர்கள் . 300 மில்லியன் பங்கேற்பாளர்கள், 39% பேர் ரசிகைகள் என்பது ஐசிசி உற்சாக அறிக்கை வெளியிடும் சந்தை ஆய்வுத் தகவலாகும்.

இந்த ஆய்வு 12 முழு உறுப்பு கிரிக்கெட் நாடுகள், சீனா, மற்றும் அமெரிக்காவில் நடத்தப்பட்டுள்ளது. சீனாவும் அமெரிக்காவும் கிரிக்கெட்டுக்கு பெரிய ஆதரவு இருக்கும் நாடுகளாக அடையாளம் காணப்பட்டுள்ளது.

டேவ் ரிச்சர்ட்சன் கூறும்போது, “டி20 கிரிக்கெட்டை பயன்படுத்தி கிரிக்கெட்டை மேலும் பிரபலப்படுத்திக் கொண்டிருக்கிறோம்” என்றார். நம் உறுப்பினர்களில் 75% டி20 கிரிக்கெட்தான் ஆடுகின்றனர். ஆகவே கிரிக்கெட்டை மேலும் பிரபலப்படுத்த டி20 வடிவமே சிறந்தது. ஆனாலும் டெஸ்ட் கிரிக்கெட்டையும் ரசிகர்கள் அதிகம் நேசிப்பது சர்வேயில் தெரியவந்தது. ஆனாலும் கிரிக்கெட் வளர்ச்சிக்கு டி20தான் சிறந்த வழிமுறை, உலகக்கோப்பை 50 ஓவர் கிரிக்கெட் அல்ல.

மேலும், ஐசிசி நடத்தும் தொடர்களுக்கு ஏகோபித்த வரவேற்பு இருப்பதாகவும் ஒப்பிடும்போது இருதரப்பு கிரிக்கெட் தொடர்களுக்கும் உள்நாட்டு டி20க்கும் கூட ஐசிசி தொடர் அளவுக்கு வரவேற்பு இல்லை என்பதும் ஆய்வில் தெரியவந்ததாக ஐசிசி அறிக்கை கூறுகிறது. 95% ரசிகர்கள் 50 ஓவர் கிரிக்கெட் உலகக்கோப்பை மற்றும் டி20 உலகக்கோப்பையில் பெரிதும் ஆர்வம் காட்டியிருப்பதாகத் தெரிகிறது.

87% கிரிக்கெட் ரசிகர்கள் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் தேவை என்று கருதுகின்றனர்.

68% ரசிகர்கள் மகளிர் கிரிக்கெட்டில் ஆர்வம் காட்டியுள்ளனர், 65% மகளிர் உலகக்கோப்பையில் ஆர்வம் காட்டியுள்ளனர், 70% ரசிகர்கள் மகளிர் கிரிக்கெட் லைவ் கவரேஜ் வேண்டும் என்று விரும்பியுள்ளனர்.

கிரிக்கெட் அல்லாத ரசிகர்கள் பலரிடம் ஆய்வு நடத்தியதில் கிரிக்கெட்டை இன்னும் எளிமையாக நடத்துங்கள், கிரிக்கெட் போட்டி அட்டவணைகளை இன்னும் எளிதாக்குங்கள் என்று கூறியுள்ளனர்.

Published by
Venu

Recent Posts

“இந்தி தேசிய மொழி அல்ல, அது ஒரு… ” அரங்கத்தை அதிர் வைத்த அஸ்வின்!

காஞ்சிபுரம் : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரருமான ரவிச்சந்திரன் அஷ்வின் இன்று…

1 hour ago

திருப்பதி உயிரிழப்புகள் : நீதி விசாரணை, ரூ.25 லட்சம் நிவாரணம், அரசு வேலை! சந்திரபாபு நாயுடு அறிவிப்பு!

திருப்பதி : ஆந்திர பிரதேச மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாளை (ஜனவரி 10) முதல் ஜனவரி 19ஆம் தேதி…

2 hours ago

சத்தீஸ்கர்: இரும்பு ஆலையில் பயங்கர விபத்து… 30க்கும் மேற்பட்டோரின் நிலைமை என்ன?

சத்தீஸ்கர்: சத்தீஸ்கரின் முங்கேலி மாவட்டத்தில் இரும்பு ஆலையில் புகைபோக்கி இடிந்து விழுந்ததில் சில தொழிலாளர்கள் காயமடைந்தனர் என்றும், பலர் விபத்தில்…

4 hours ago

ஹைதராபாத் ரயில் நிலையத்தில் பயணிகள் ஓய்வெடுக்க அட்டகாசமான படுக்கை வசதி!

ஹைதராபாத்: ஹைதராபாத்தின் செர்லப்பள்ளி பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள ரயில் நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக,  அதிநவீன வசதிகளுடன் கூடிய 'ஸ்லீப்பிங் பாட்'…

4 hours ago

தம்பி விஜயுடன் ஏன் சண்டை போடுகிறோம்.? சீமான் கொடுத்த விளக்கம்!

சென்னை : தந்தை பெரியார் குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய கருத்துக்கள் தற்போது…

5 hours ago

திருப்பதி மரணங்கள்: ‘கைது நடவடிக்கை வேண்டும்’… பவன், சந்திரபாபு நாயுடுவுக்கு ரோஜா சரமாரி கேள்வி.!

ஆந்திரப் பிரதேசம்: வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்விற்கான இலவச தரிசன டோக்கன்களை வாங்க, நேற்று இரவு அதிகளவில்…

5 hours ago