10 வருடங்களாக ஐபிஎல்… வெற்றிக்கு பிறகு மனம் திறந்த சஞ்சு சாம்சன்!

Sanju Samson

Sanju Samson: ஆட்டநாயகன் விருதை சந்தீப் சர்மாவுக்கு கொடுக்க வேண்டும் என்று ராஜஸ்தான் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் மனம் திறந்து பேசியுள்ளார்.

நடப்பாண்டு ஐபிஎஸ் தொடரின் 4வது லீக் போட்டி நேற்று பிற்பகல் ஜெய்ப்பூர் ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், கேஎல் ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் மோதின. இப்போட்டில், டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 4 விக்கெட்டுகளை இழந்து 193 ரன்கள் எடுத்தது.

அதிகபட்சமாக கேப்டன் சஞ்சு சாம்சன் 82 ரன்கள் எடுத்தார். இதுபோன்று லக்னோ சார்பில் நவீன்-உல்-ஹக் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதைத்தொடர்ந்து பெரிய இலக்கை நோக்கி களமிறங்கிய லக்னோ 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 173 ரன்கள் சேர்த்தது. நிக்கோலஸ் பூரான் 64 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். ராஜஸ்தான் தரப்பில் ட்ரெண்ட் போல்ட் 2 விக்கெட்டுகள் எடுத்தார்.

இதன்மூலம் ராஜஸ்தான் அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் முதல் வெற்றியை பதவி செய்தது. இந்த போட்டியில் ஆட்டநாயகனாக ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன் தேர்வு செய்யப்பட்டார். அப்போது சஞ்சு சாம்சன் கூறியதாவது, அப்போதும் போட்டியின் மிடியில் நேரத்தை செலவிடுவது வேடிக்கையாக இருக்கும்.

இதில் வெற்றி பெறுவது இன்னும் சிறப்பு. இந்த முறை எனக்கு கொஞ்சம் வித்தியாசமான கலவையுடன் ஒரு வித்தியாசமான ரோல் கொடுக்கப்பட்டுள்ளது. பயிற்சியாளர் சங்ககாரா பின்பற்றவேண்டிய சில பரிந்துரைகளை எனக்கு வழங்கியிருந்தார். நான் 10 வருடங்களாக ஐபிஎல் விளையாடி வருகிறேன். இதனால் எனக்கு சில அனுபவங்கள் வந்துள்ளது. சூழ்நிலைகளை புரிந்துகொள்ள நான் அதிக நேரம் செலவழிக்க வேண்டும் என நினைக்கிறன்.

சர்வதேச ஒருநாள் போட்டிகளில் விளையாடியதும் எனக்கு இங்கு உதவியது. இது உங்கள் பலம் மற்றும் பலவீனங்களைப் புரிந்துகொள்வது பற்றியதாகும். முதல் பந்தாக இருந்தாலும் கடைசி பந்தாக இருந்தாலும், அதற்கு எதிர்வினையாற்றும் பேட்ஸ்மேன் நான். இந்த ஆட்டநாயகன் விருதை நான் சந்தீப் சர்மாவுக்கு கொடுக்க வேண்டும்.

ஏனென்றால், அவர் வீசிய 3 ஓவர்கள் சிறப்பாக இல்லாமல் போயிருந்தால் இந்த விருதுக்கு நான் வந்திருக்க மாட்டேன். இது திறமை மட்டுமல்ல, அழுத்தமான நேரங்களில் திறமை மட்டுமல்ல கேரக்டரரும் முக்கியம் என்று அஸ்வின் பாய் சொல்லி கேட்டுள்ளேன் எனவும் சஞ்சு சாம்சன் தெரிவித்தார். இதனிடையே, சந்தீப் சர்மா 3 ஓவருக்கு 22 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்