அஸ்வின் வீட்டில் சோகம்.. 4 குழந்தைகள் உட்பட 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!
தமிழகத்தில் கொரோனா பரவல் தீவிரமடைந்து வரும் நிலையில், இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வினின் வீட்டில் 4 குழந்தைகள் உட்பட 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
இந்தியாவில் கொரோனா பரவலின் இரண்டாம் அலை தீவிரமாக பரவிவரும் நிலையில், கொரோனா பரவலுக்கு மத்தியில் ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும், தொடர் தொடங்குவதற்கு முன்பாக வீரர்கள், ஊழியர்கள் என சிலருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், அதன்பின் மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் காரணமாக ஐபிஎல் தொடர் எந்தவித தடையுமின்றி நடைபெற்று வருகிறது.
அந்தவகையில் டெல்லி அணியின் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின், கொரோனா வைரசுக்கு எதிராக தனது குடும்பத்தார் போராடி வரும் நிலையில், அவர்களுக்காக உடன் இருப்பது அவசியம் என்பதால் ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். தற்பொழுது அவர் சென்னை சென்றடைந்து, தனது குடும்பத்தினருடன் உள்ளார்.
இந்நிலையில், அஸ்வின் குடும்பத்தில் 4 குழந்தைகள் உட்பட 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதாக அவரின் மனைவி ப்ரீத்தி அஸ்வின் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அந்த பதிவில் அவர், “எங்கள் குடும்பத்தில் பெரியவர்கள் 6 பேருக்கும், சிறியவர்கள் 4 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 5 முதல் 8 நாட்கள் மிகவும் மோசமாக இருந்தது. கொரோனா நோய் மிகவும் தனிமையில் இருக்கக்கூடிய ஒன்றாகும். அனைவரும் தடுப்பூசி எடுத்துக் கொள்வது சிறந்தது.” என்று தெரிவித்துள்ளார்.
Take the vaccine. Give yourselves and your family the best chance to fight this.
— Wear a mask. Take your vaccine. (@prithinarayanan) April 30, 2021
நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் கொரோனா அச்சம் காரணமாக கொரோனா அச்சம் காரணமாக ஆஸ்திரேலிய வீரர்கள் ஆன்ட்ரூ டை, ஆடம் சாம்பா, கேன் ரிச்சர்ட்சன், இங்கிலாந்து வீரர் லிவிங்ஸ்டோன் ஆகியோரும் ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறியுள்ளனர். வீரர்கள் மட்டுமின்றி, அம்பையர்கள் ஆகியோரும் தொடரில் இருந்து வெளியேறியது குறிப்பிடத்தக்கது.