World Cup 2023:உலகக் கோப்பையைப் பார்க்க மைதானத்திற்கு வந்த 10 லட்சம் ரசிகர்கள்..!
ஒருநாள் உலகக்கோப்பை உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்த முறை உலகக்கோப்பை இந்தியாவில் நடைபெறுகிறது. போட்டியை ஆன்லைனில் பார்ப்பது முதல் மைதானத்தை சென்று பார்ப்பது வரை அனைத்து வகையிலும் பார்வையாளர்கள் அந்தந்த அணிகளுக்கு ஆதரவளித்து வருகின்றனர்.
இப்போது உலகக்கோப்பையில் புதிய சாதனை படைக்கப்போகிறது. இம்முறை பெரிய சாதனையைச் செய்யப் போவது வீரர்கள் அல்ல பார்வையாளர்கள்தான். உலகக்கோப்பை தொடர் தற்போது கடைசி கட்டத்தை எட்டியுள்ளது. முதல் அரையிறுதிப் போட்டி நவம்பர் 15-ஆம் தேதி நடைபெறுகிறது. இது தவிர, உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டி நவம்பர் 19 ஆம் தேதி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி னைத்தனத்தில் நடைபெறுகிறது.
உலகக்கோப்பை தொடரில் இன்னும் ஆறு போட்டிகள் விளையாட உள்ளன. அவற்றில் இரண்டு லீக் போட்டிகள் விளையாடப்படுகிறது. அதே நேரத்தில் கடைசி லீக் நிலை போட்டியில் நாளை இந்தியா மற்றும் நெதர்லாந்து இடையே நடைபெறுகிறது.
Another milestone achieved at #CWC23 ????
More ???? https://t.co/qdnaQ3oTkQ pic.twitter.com/SLAQT0Gubw
— ICC (@ICC) November 11, 2023
2023 உலகக்கோப்பையில் இதுவரை 1 மில்லியன் ரசிகர்கள்:
2023 உலகக்கோப்பையைக் காண இதுவரை 10 லட்சம் பார்வையாளர்கள் மைதானத்திற்கு வந்துள்ளனர். தற்போது இந்த 13-வது உலகக் கோப்பை போட்டியானது இதுவரை அதிகம் பார்க்கப்பட்ட ஐசிசி போட்டியின் சாதனையை முறியடிக்கும்தருவாயில் உள்ளது. நேற்று தென்னாப்பிரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் இடையேயான போட்டியின் போது அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் கலந்து கொண்ட ரசிகர்கள் மூலம் இதுவரை 10 லட்சம் பார்வையாளர்கள் மைதானத்திற்கு வந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டது.
13-வது உலகக்கோப்பை முடிவதற்கு இன்னும் ஆறு போட்டிகள் மீதமுள்ள நிலையில் இதுவரை அதிகம் பார்க்கப்பட்ட கிரிக்கெட் உலகக்கோப்பையாக இது மாறும் என கூறப்படுகிறது. ஐசிசி நிகழ்வுகளின் தலைவர் கிறிஸ் டெட்லி கூறுகையில், போட்டி ஏற்கனவே மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளதாகவும், நாக் அவுட் கட்டத்தில் இன்னும் பல சாதனைகள் முறியடிக்கப்படும் என எதிர்பார்க்கிறது.
ஒரு மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களுடன் ஐசிசி ஆண்கள் கிரிக்கெட் உலகக்கோப்பை உலகெங்கிலும் உள்ள ஆதரவையும், ஆர்வத்தையும் காட்டுகிறது. உலகக் கோப்பைக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது என்பதை இது எடுத்துக்காட்டுகிறது என கூறினார்.
450 மில்லியன் பார்வைகள்:
இந்த உலகக்கோப்பை தொடரின் 34-வது லீக் போட்டியின் முடிவின் படி இதுவரை ஆன்லைனில் 450 மில்லியன் பார்வைகள் பார்த்துள்ளனர். இந்த உலகக் கோப்பை தொடரில் இந்தியா 8 போட்டிகள் விளையாடி உள்ளது. இந்தியா விளையாடிய 8 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. இந்தியா விளையாடிய அனைத்து போட்டிகளும் 50 மில்லியன் பார்வைகளுக்கும் மேல் கடந்துள்ளது.
மேலும் கடந்த 2019 ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடரின் பார்வையாளர்களின் எண்ணிக்கையை விட இந்த உலகக் கோப்பையை பார்ப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. இன்னும் அரையிறுதி மற்றும் இறுதிபோட்டிகள் நடைபெறும்போது இந்த எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும்.