மும்பை பக்கம் வீசும் அதிர்ஷ்ட காற்று.. 0 ரன்கள் 3 விக்கெட்.. திணறும் டெல்லி!
ஐபிஎல் தொடரில் 13 ஆவது சீசன், தற்பொழுது இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இன்று நடைபெறும் முதல் பிளே-ஆப்ஸ் சுற்றில் மும்பை இந்தியன்ஸ் – டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் மோதிவருகிறது. துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேபிட்டல்ஸ் அணி, பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் களமிறங்கிய மும்பை அணி 20 ஓவர் முடிவில் 200 ரன்கள் அடித்தது. 201 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் தற்பொழுது டெல்லி அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக பிருத்வீ ஷா – தவான் களமிறங்கினார்கள். முதல் ஓவரை ட்ரெண்ட் போல்ட் வீசிய நிலையில், முதல் பந்துலே ப்ரித்வி ஷா வெளியேறினார்.
அதனைதொடர்ந்து 4 ஆம் பந்தில் ரஹானே வெளியேற, 1 ஓவர் முடிவில் ஒரு றன் கூட எடுக்காமல் 2 விக்கெட்டை இழந்தது. அதேபோல 1.2 ஆம் ஓவரில் தவான் தனது விக்கெட்டை இழந்தார். இதன்மூலம் டெல்லி அணி, முதலில் இறுதி போட்டிக்கு போவதற்கான வாய்ப்பை இலகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.