"0/0 டிக்ளேர் " வினோத முடிவால் தோல்வியை தழுவிய கிரிக்கெட் அணி..!!

Default Image
கிரிக்கெட் போட்டிகளில் டிக்ளேர்கள் சில வேளைகளில் விநோதமாக நடைபெற்றுள்ளது. அந்த வகையில் ஒரு முறை தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து அணிகள் மழையால் பாதிக்கப்பட்ட டெஸ்ட் போட்டியில் முடிவு வேண்டும் என்பதற்காக பேட் செய்யாமலேயே டிக்ளேர் செய்வது நடந்தது. இது 2000-ம் ஆண்டு செஞ்சூரியனில் நடந்தது.
இன்று, சனிக்கிழமை நியூஸிலாந்தில் கவுண்டி அணிகளான செண்ட்ரல் ஸ்டேக்ஸ் மற்றும் கேண்டர்பரி அணிகள் ஆகியவை இரண்டும் அரிதான வகையில் 0/0 என்றிஉ டிக்ளேர் செய்துள்ளது நடந்தது.
பிளங்கெட் ஷீல்ட் கவுண்டி போட்டியில் செண்ட்ரல் ஸ்டேக்ஸ் அணி முதலில் பேட் செய்து முதல் நாள் ஆட்டத்தில் 301/7 என்று இருந்தது. ஆனால் 2 மற்றும் 3ம் நாள் ஆட்டங்கள் முற்றிலும் மழையால் கைவிடப்பட்டன.
இந்நிலையில் இன்று 4 மற்றும் இறுதி நாளுக்காக வானம் கருணை காட்டிய நிலையில் ஆட்டம் தொடங்கியது செண்ட்ரல் ஸ்டேக்ஸ் அணி மேலும் 51 ரன்கள் சேர்த்து 352/7 என்று டிக்ளேர் செய்தது.
இந்நிலையில் கேண்டர்பரி தன் முதல் இன்னிங்ஸை 0/0 என்று டிக்ளேர் செய்தது. இதனையடுத்து செண்ட்ரல் ஸ்டேக்ஸ் அணி தன் 2வது இன்னிங்சை 0/0 என்று டிக்ளேர் செய்தது.
இதனையடுத்து கேண்டர்பரி 353 ரன்களை 89 ஓவர்களில் எடுத்தால் வெற்றி என்ற நிலை உருவானது. ஆனால் செண்ட்ரல் ஸ்டேக்ஸ் அணியின் பந்து வீச்சைத் தாக்குப் பிடிக்க முடியாமல் கேண்டர்பரி 131/9 என்று ஆனது. அதன் பிறகு 25.5 ஓவர்களை கடைசி விக்கெட்டுக்காகச் ஜோடி சேர்ந்த கேண்டர்பரியின் ஆண்ட்ரூ ஹேசில்டைன், வில்லியம்ஸ் ஆகியோர் செண்ட்ரல் ஸ்டேக்ஸ் அணியை வெற்றி பெற விடாமல் தடுத்தனர், ஆனால் ட்ரா முடிவு என்று கேண்டர்பரி மகிழ்ச்சியடையும் நேரத்தில் ஹேசில்டைன் விக்கெட்டை ரயான் மெக்கோன் வீழ்த்த இன்னும் ஒரு ஓவர் மீதமுள்ள நிலையில் கேண்டர்பரி தோற்றது.
பேசாமல் முதல் இன்னிங்ஸை ஆடியிருந்தால் ஆட்டம் ட்ரா ஆகியிருக்கும் விநோத டிக்ளேரால் தோல்வி கண்டது கேண்டர்பரி. இதனால் அதன் வீரர்கள் மனம் உடைந்ததாக நியூஸிலாந்து கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
DINASUVADU 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்