ஸ்டீவ் ஸ்மித்தின் கிரிக்கெட் உபகரணங்களை குப்பையில் தூக்கிப் போட்ட தந்தை…!ஆத்திரத்துடன் ஸ்மித்தை வீட்டுக்கு அழைத்து வந்த அவரது தந்தை …!

Published by
Venu

 ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் பந்தை சேதப்படுத்தும் விவகாரத்தில் சிக்கி 12 மாதங்கள் தடை பெற்ற நிலையில் கிரிக்கெட் உபகரணங்களை அவரின் தந்தை குப்பைக் கிடங்கில் தூக்கி  எறிந்துள்ளார்.

Image result for STEVE SMITH

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியின் போது, பந்தை சேதப்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதில் ஆஸ்திரேலிய வீரர்கள் ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர், கேமரூன் பான்கிராப்ட் ஆகியோர் சிக்கினார்கள். இந்த குற்றத்துக்கு தண்டனையாக ஸ்மித், வார்னருக்கு 12 மாதங்கள் தடையும், கேமரூன் 9 மாதங்களையும் விதித்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் உத்தரவிட்டது.

அதுமட்டுமல்லாமல்,ஸ்மித் கண்ணீர் விட்டு அழுதபோது அவரின் அருகே நின்றிருந்த அவரின் தந்தை பீட்டர் ஆற்றுப்படுத்தினார். இந்த தடை மூலம் ஸ்மித், வார்னர் இருவருக்கும் தனிப்பட்ட முறையில் ஸ்பான்சர்ஷிப் இழப்பு, ஊதியம் இழப்பு, ஐபிஎல் போட்டியில்பங்கேற்க முடியாமல் போனது, என தனித்தனியாக ரூ.30 கோடிக்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளது.

இதனால், ஸ்மித்தும், அவரின் தந்தை பீட்டரும் மிகுந்த அதிருப்தியிலும், வேதனையிலும் இருந்துள்ளனர்.

இந்நிலையில், ஆஸ்திரேலியாவில் இருந்து வெளியாகும் சேனல் செவன் வெளியிட்ட செய்தியில், ஸ்மித்தை விமானநிலையத்தில் இருந்து வீட்டுக்கு அழைத்து வந்த அவரின் தந்தை பீட்டர் மிகுந்த ஆத்திரத்தில் இருந்துள்ளார்.

ஸ்மித்தின் வீட்டில் கூடியிருந்த ஊடகத்தினரைச் சந்திக்க மறுத்த அவரின் தந்தை பீட்டர், ‘விரைவில் ஸ்மித் சரியாகிவிடுவார், அவர் கிரிக்கெட்டில் தொடர்ந்து நிலைத்து விளையாடுவார் நீங்கள் செல்லலாம்’ என்று கோபமாகத் தெரிவித்தார்.

அதன்பின், காரில் இருந்து ஸ்மித்தின் கிரிக்கெட் உபகரணங்களை எடுத்த பீட்டர், வீட்டில் குப்பைக் கிடங்கில் தூக்கி எறிந்துவிட்டு,பின்னர்  கோபத்துடன் வீட்டுக்குள் சென்றார் .

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Published by
Venu

Recent Posts

“கொஞ்சம் சகித்து போயிருக்கலாம்”…மணிமேகலைக்கு அட்வைஸ் கொடுத்த ஷகிலா!

சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…

15 hours ago

பாஸ்போர்ட் அப்ளை செய்ய போறீங்களா.? அடுத்த 3 நாட்கள் முடியவே முடியாது.!

மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…

15 hours ago

INDvsBAN : “அவர் ரொம்ப உதவி பண்ணாரு”! சதம் விளாசிய பின் அஸ்வின் பேச்சு!

சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…

15 hours ago

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்! தங்கலான் முதல் வாழ வரை!

சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…

16 hours ago

‘இட்லி கடை’ போட்ட தனுஷ்.! மீண்டும் கேங்ஸ்டர் படமா?

சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…

16 hours ago

INDvBAN : சம்பவம் செய்து வரும் அஸ்வின்-ஜடேஜா! வலுவான நிலையில் இந்தியா!

சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…

16 hours ago