ஷிகர் தவண் மாதிரி என்னால் பேட்டிங் செய்ய முடியாது!முரளி விஜய்
இந்திய வீரர் முரளி விஜய், ஆப்கானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் முதல்நாள் ஆட்டத்தில் சதம் கண்ட நிலையில் தான் அடித்த இந்தச் சதம், அணுகுமுறை, பிட்ச், பவுலிங் உள்ளிட்டவை பற்றி சுருக்கமாகப் பேட்டியளித்தார்.
அவர் கூறியதாவது:
காலையில் கடினமாக இருந்தது. நான் விரும்பும் அளவுக்கு, வசதியாக உணரும் அளவுக்கு என்னால் பந்தைச் சரியாகப் பார்க்க முடியவில்லை. ஆனால் நான் என் பேட்டிங் குறித்து கடினமாக உழைத்தேன், ஐபிஎல் போட்டிகளின் போது மைக் ஹஸ்ஸியுடன் பணியாற்றினேன், எனவே நேற்றைய சதத்துக்கு அவருக்கு நான் நன்றி தெரிவிக்கிறேன்.
ஷிகர் தவண் ஒரு முனையில் அடித்து ஆடினாலும் நான் என் ஆட்டத்திட்டத்தின் படிதான் ஆடினேன்,நேற்று ஷிகர் தவண் அபார ஆட்டம் ஆடினார் ஆனால் நான் ஷிகர் தவண் போல் பேட் செய்ய வேண்டும் என்று நினைக்க முடியாது.
3 தொடக்க வீரர்களும் சிறப்பாக ஆடுகிறோம். கொஞ்சம் பவுன்ஸ் இருந்தது, நல்ல ஸ்போர்டிங் பிட்ச் இது. நாங்களும் பந்துகளை சரியான இடத்தில் பிட்ச் செய்வோம் என்று நம்புகிறேன்.
ஆப்கான் வீரர்களும் நன்றாக மகிழ்ச்சியுடன் ஆடினார்கள் என்றே நினைக்கிறேன் ஆட்ட முடிவில் கை ஓங்கியது. நாங்கள் இன்னும் சில வேலைகள் செய்ய வேண்டியுள்ளது. இந்தச் சதம் எனக்கு முக்கியத்துவம் வாய்ந்தது, சமீபமாக நீண்ட நேரம் பேட் செய்யவில்லை. எனவே இந்தப் போட்டியில் இப்படி ஆடியது முக்கியமானது.
இவ்வாறு கூறினார் விஜய்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.