வெ.இ VS ஆஸ்திரேலியா – இரண்டாவது ஒருநாள் போட்டி; வெளியான அதிர்ச்சி தகவல்…!

Default Image

வெஸ்ட் இண்டீஸ், ஆஸ்திரேலியா ஆகிய இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டியில் வெளியான அதிர்ச்சி தகவல் காரணமாக போட்டி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலிய அணியானது,வெஸ்ட் இண்டீஸுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது.

முதல் ஒருநாள் போட்டி:

அதன்படி,கடந்த 21 ஆம் தேதியன்று நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா 49 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 252 ரன்கள் எடுத்தது. இதனால்,இலக்கை நோக்கி களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி எட்டாவது ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 27 ரன்கள் எடுத்தது.இறுதியாக 27 வது ஓவரில் ஆல் அவுட்டானார்கள்.

மேலும்,ஆஸ்திரேலிய பௌலர்கள் மிட்செல் ஸ்டார்க், ஜோஸ் ஹேசில்வுட் ஆகியோரின் பந்து வீச்சால் வெஸ்ட் இண்டீஸ் அணி 253 ரன்கள் இலக்கை எட்ட முடியாமல் 123 ரன்கள் மட்டுமே எடுத்து 133 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியைச் சந்தித்தது. இப்போட்டிகளில் கேப்டன் கீரோன் பொல்லார்ட் 56 ரன்கள் எடுத்தார்.

இரண்டாவது ஒருநாள் போட்டி:

இதனையடுத்து,இன்று நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ், ஆஸ்திரேலியா ஆகிய இருஅணிகளுக்கும் இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டிக்கு முன்னதாக டாஸ் போடப்பட்டது.இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது.

அதன்படி,பந்துவீச வெஸ்ட் இண்டீஸ் அணி ஆயத்தமானது. இதற்கிடையில்,வெஸ்ட் இண்டீஸ் அணியில் ஒருவருக்கு கொரோனா உறுதியானதாக அதிர்ச்சியளிக்கும் செய்தி ஒன்று வந்தது.ஆனால்,அவரின் பெயர் வெளியிடப்படவில்லை.

இதனால்,இரு அணியில் உள்ள வீரர்கள் அனைவரும் உடனே தனிமைப்படுத்தப்பட்டு,அவரவர் ஹோட்டல் அறைகளுக்குத் திரும்பிச் சென்றனர். இதனால்,இரண்டாவது ஒருநாள் போட்டி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மேலும்,இது தொடர்பாக வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் கூறியதாவது:”வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான இரண்டாவது  ஒருநாள் போட்டி கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அனைத்து வீரர்களுக்கும் கொரோனா நெகடிவ் என உறுதிசெய்யப்பட்டவுடன் போட்டி எப்போது மறுதொடக்கம் செய்யப்படும் என்பது குறித்த தேதி பின்னர் அறிவிக்கப்படும்” என்று தெரிவித்துள்ளது.

இதனால்,வீரர்கள் ஆர்.டி.பி.சி.ஆர்-சோதனை முடிவுகள் வரும் வரை ஹோட்டல் அறைகளில் தனிமையில் இருப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

டி-20 போட்டிகள்:

முன்னதாக நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கிடையேயான,5 போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் 4-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

ஆஸ்திரேலியா அணி:

ஜோஷ் பிலிப், பென் மெக்டெர்மொட், மிட்செல் மார்ஷ், மொய்சஸ் ஹென்ரிக்ஸ், அலெக்ஸ் கேரி (c/w), ஆஷ்டன் டர்னர், மத்தேயு வேட், மிட்செல் ஸ்டார்க், வெஸ் அகர், ஆடம் ஜாம்பா, ஜோஷ் ஹேசில்வுட்

வெஸ்ட் இண்டீஸ் அணி:

எவின் லூயிஸ், ஷிம்ரான் ஹெட்மியர், டேரன் பிராவோ, ஜேசன் முகமது, நிக்கோலஸ் பூரன் (w), கீரோன் பொல்லார்ட் (c), ஜேசன் ஹோல்டர், அல்சாரி ஜோசப், அகீல் ஹொசைன், ஹேடன் வால்ஷ் ஜூனியர், ஷெல்டன் கோட்ரெல்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்