வெற்றியை நிர்ணயிக்கும் கடைசி போட்டி..ஆட்டத்தை விட்டு வெளியேறினார் தவாண்..!
- இந்தியா – ஆஸ்திரேலிய அணிகள் மோதும் 3-வது ஒரு நாள் போட்டி இன்று நடைபெற்று வருகிறது.
- தோள்ப்பட்டையில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக மைதானத்தை விட்டு தவாண் வெளியேறினார்.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ள ஆஸ்திரேலிய அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டித் தொடரில் விளையாடி வருகின்றது. அவ்வாறு முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது.நேற்று முன்தினம் நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது.கடைசி மற்றும் 3வது ஒருநாள் போட்டி இன்று பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் பின்ச் முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தவாறு அந்த அணி பேட்டிங்க் செய்து வருகிறது.இந்திய அணி பவுலிங்க் செய்து வருகிறது.இந்நிலையில் தோள்பட்டை காயம் காரணமாக ஷிகர் தவண் தொடக்கத்திலேயே வெளியேறி உள்ளார்.
இன்றைய ஆட்டத்தில் 5-வது ஓவரில் ஆஸி. கேப்டன் ஆரோன் பிஞ்ச் அடித்த ஷாட்டை தாவிப் பிடிக்க முயன்று பீல்டிங் செய்ய முயன்ற தவாணின் தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. வலி அதிகமாகவே அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டது ஆனாலும் வலி குறையாததால்,அவர் பெவிலியன் திரும்பினார்.
கடந்த 2-வது ஒருநாள் போட்டியின் போதே ஆஸி.வீரர் கம்மின்ஸ் பவுன்ஸரை சமாளிக்க முடியாமல் மார்பு விலா எலும்பில் தவான் அடிவாங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது அந்த காயத்தால் ஏற்கனவே அவதிப்பட்டு வந்த தவாணுக்கு மீண்டும் காயம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.