விராத் கோலியுடன் போட்டோ எடுத்த கல்லூரி மாணவர் ரிமாண்ட்..!!
மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் போது பாதுகாப்பு வேலியை தாண்டி விராட் கோலியை நெருங்கிய இளைஞர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் இன்று ரிமாண்ட் செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட உள்ளார்.
மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டி ஐதராபாத் நகரில் நேற்று தொடங்கியது. முதல் நாள் ஆட்டத்தில் மேற்கு இந்திய தீவுகள் அணி 295 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து விளையாடி வருகிறது. இந்நிலையில், ஆட்டத்தின் போது மைதானத்தில் இருந்த முகம்மது கான் என்ற 19 வயது ரசிகர் ஆர்வ மிகுதியால் பாதுகாப்பு வேலியை ஏறிக்குதித்து விராட் கோலியை நெருங்கி, அவரை கட்டியனைத்து செல்பி எடுத்தார். இதனை அடுத்து, மைதான பாதுகாவலர்கள் அவரை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.போலீசார் விசாரணையில் அங்குள்ள கல்லூரி ஒன்றில் இரண்டாம் ஆண்டு படித்து வரும் முகம்மது கான் தீவிர விராட் கோலி ரசிகர் எனவும் அவரிடம் செல்பி எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற நீண்ட நாள் பேராசையில் பாதுகாப்பு வேலியை ஏறிக்குதித்து மைதானத்தில் நுழைந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.கைதான இளைஞர் மீது வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், அவரை இன்று ரிமாண்ட் செய்ய உள்ளனர்.