விராட் கோலி பேயாட்டம்: பெங்களூர் அணி இமாலய ரன் குவிப்பு!!
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் இடையேயான ஐபிஎல் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. இந்தபோட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் அணி 20 ஓவர்களின் முடிவில் 213 ரன்கள் விளாசி அசத்தியுள்ளது.
அந்த அணியின் கேப்டன் விராட் கோலி 58 பந்துகளில் 100 ரன்கள், மொயின் அலி 28 பந்துகளில் 66 இரண்டும் விளாசித் தள்ளினர். இதன் மூலம் 20 ஓவர்களின் முடிவில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து பெங்களூரு அணி 213 ரன்கள் குவித்துள்ளது.