விராட் கோலி சாதனை…முச்சதம் அடித்து அசத்தினார்..!!
மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி சதம் அடித்தார். முதல் இரண்டு போட்டிகளிலும் சதம் அடித்த கோலி தொடர்ந்து மூன்றாவது சதம் அடித்து சாதனை படைத்துள்ளார்.
மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டி புனேவில் நடந்து வருகிறது. முதலில் பேட்டிங் செய்த மேற்கிந்தியத் தீவுகள் அணி 50 ஓவர்களில் 283 ரன்கள் எடுத்தது.பின்னர், 284 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா 8 ரன்களில் அவுட் ஆக, கேப்டன் விராட் கோலி பேட்டிங் செய்தார்.
110 பந்துகளை சந்தித்த அவர் 1 சிக்சர் 10 பவுண்டரிகளுடன் சதம் அடித்தார். முதல் இரண்டு போட்டிகளிலும் சதம் அடித்த கோலி தொடர்ந்து அடிக்கும் மூன்றாவது சதம் இதுவாகும்.இதன்மூலம் ஒருநாள் போட்டியில் தொடர்ந்து மூன்று சதம் அடித்த இந்திய வீரர் என்ற சாதனையை விராட் கோலி பெற்றுள்ளார்.
dinasuvadu.com